வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

96 பேருடன் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்திரேலியாவில் மீட்பு

இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்ற 96 அகதிகளுடன் சென்ற மற்றுமொரு படகு, அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த அகதிகள் படகு விடயத்தை புதிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் எவ்வாறு அணுகுவார் என, அவுஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள கொள்கையின் படி, இலங்கை அகதிகளுக்கு 6 மாதங்களுக்கும், இந்தோனேசிய அகதிகளுக்கு 3 மாதங்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமாட்டாது.
முன்னாள் அவுஸ்திரேலிய பிரதர் கெவின் ரூட் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பில் புதிய பிரதமர் எந்த வகையிலான தீர்மானத்தை மேற்கொள்வார் என்பது அவர் முகம் கொடுக்கவுள்ள முதலாவது சோதனையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டுக்கு, தொழில் கட்சியின் தோற்றுப் போன பழைய கொள்கைகளை மாற்றும் எண்ணம் இல்லை என எதிர்க்கட்சியின் குடிவரவுத்துறை பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த கொள்கை மாற்றப்பட்டு, அவர்களுக்கு உடனடியாக அகதி அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே சரியான தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்து வழங்குமாறு கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று சிட்னியில் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இறுதியாக மீட்கப்பட்ட அகதிகள் அவர்களுக்கான மருத்துவ சோதனைகளின் பின்னர் கிரிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’