வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

2010 வரவுசெலவுத்திட்டம் சபையில் நாளை சமர்ப்பிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் இந்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் நிதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை சமர்ப்பி க்கப்ப டவிருக்கின்றது.
வரவுசெலவுத்திட்டத்திற்கான திட்டமிடல், நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூன் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதம் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை எட்டு நாட்களுக்கு இரவிரவாக நடைபெறும்.
வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதம் நான்கு நாட்களுக்கும் குழுநிலை விவாதம் நான்கு நாட்களுக்கும் காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறுவதுடன் வரவுசெலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.
ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற்றமையினால் அரசாங்கம் இந்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்காது அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக மூன்று மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பித்தது.
கணக்கு வாக்கெடுப்பிற்கான மூன்றுமாத காலம் நிறைவடைந்ததை அடுத்து ஜனாதிபதி அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜூன் மாதம் 30 ஆம் திகதிவரையான மூன்று மாதங்களுக்கான அரச செலவினங்களுக்காக 44014 கோடி ரூபாவை ஒதுக்கிகொண்டார்.
இந்நிலையிலேயே இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் தி.மு. ஜயரட்வினால் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் வரவு செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. இதேவேளை 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூ லை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடை த் துள் ளதாக நிதியமைச்சு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’