அயர்லாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
பெங்களூரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி முதல் விக்கெட்டை ஒரு ஓட்டத்தை பெற்ற நிலையில் இழந்தது. அதன்பின் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எனும் நிலையிலிருந்த அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 207 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வில்லியம் போர்டர் பீல்ட் 75 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் பிரதான பந்துவீச்சாளர்களைவிட பகுதி நேர பந்துவீச்சாளர் யுவராஜ் சிங் சிறப்பாக பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் யுவராஜ் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை இதுவே முதல் தடவையாகும்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 24 ஓவர்களில் 100 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 4 ஆவது விக்கெட்டையும் இழந்தது. வீரேந்தர் ஷேவாக் (5) கௌதம் காம்பீர் (10) டெண்டுல்கர் (38) வீராட் கோலி (34) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் டோனியும் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற யூஸுப் பதான் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். அவர் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல்30 ஓட்டங்களைப் பெற்றார். அவர் 3 சிக்ஸர்களையும் விளாசினார். இப்போட்டியில் யூஸுப் பதானும் போர்டர் பீல்ட்டும் மாத்திரமே சிக்ஸர் அடித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியஅணி 46 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. யுவராஜ் சிங் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’