வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஜூலை, 2012

இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது



லங்கை - இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் 3ஆவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்று 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. இன்று மதியம் இடம்பெற்ற நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். இறுதியாக ஜோடிசேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளை எதிர்கொண்டு 71 ஓட்டங்களையும், ஜீவன் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீர்கான் 10 ஓவர்கள் பந்துவீசி 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அசோக் டின்டா, இர்பான் பத்தான், ரோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தனர். 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் கௌதம் கம்பீர் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இறுதியாக ஜோடி சேர்ந்த சுரேஸ் ரெய்னா அபாரமாக துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 65 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார். அவரோடு இணைந்து ஆடிய இர்பான் பத்தான் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் மலிங்க 10 ஓவர்கள் பந்துவீசி 60 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். திஸ்ஸர பெரேரா, ரங்கண ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பில் சதத்தினைப் பெற்றுக்கொண்ட கௌதம் கம்பீர் தெரிவாகினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’