வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஜூலை, 2012

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்


பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் செயற்திட்டங்களை மென்மேலும் நாடளாவிய ரீதியில் மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மொறட்டுவவில்; அமைந்துள்ள தேசிய வடிவமைப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது குறித்த நிலையத்தின் செயற்திட்டங்களை நாடளாவிய ரீதியில் விரிவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் தேசிய வடிவமைப்பு நிலையத்தினது பெறுபேறுகளை விஸ்தரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்திட்டங்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் வருகை தரும் இடங்களான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காட்சிக் கூடங்களையும், விற்பனைக் கூடங்களையும் அமைப்பது தொடர்பிலும், குறித்த நிலையத்தினது மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு அதனை தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி. வி.ஜெகராஜசிங்கம், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் பணிப்பாளர் சந்திரசிறி, தேசிய வடிவமைப்பு நிலையத்தலைவர் மார்ஷல் ஜனதா, தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்திசேன, லக்சல பணிப்பாளர் அனில் ஹொஸ்வத்த ஆகியோர் உடனிருந்தனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’