எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் இறந்துவிட்ட ஈழக்கனவுக்கு புத்துயிரளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழ்நாட்டின் தலைவர்களும் முயற்சிக்கின்றனர் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.
மஹரகமயில் இன்று நடைபெற்ற ஜாதிக ஹெல உருமயவின் தேசிய மாநாட்டில் உiயாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். "இரண்டாவது ஈழ யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் முயற்சிக்கிறார். நியூயோர்க், லண்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளிலும் நகரங்களிலும் தமிழ் இனவாதிகள் ஈழ இனவாதத்தை உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு ஐ.நா. பொதுச்செயலாளரும் உதவுகிறார். உலக தமிழர் இயக்கத்தின் பேச்சாளர் சுரேஷ் சுரேந்திரன், முத்துவேல் கருணாநிதி, ஜெயலலிதா ஜெயராம் போன்ற தமிழக அரசியல்வாதிகள், சுமந்திரம் ஆகியோர் தமிழ் ஈழத்தை மீண்டும் அமைப்பது குறித்து கலந்துரையாடுகின்றனர். இதேவேளை இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ், இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கும் நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து தற்போது பேசுகிறார். அவர்கள் இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டில் இடம்பெற்ற கொலை தொடர்பாக பேசுவதுடன் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, அவர்களின் சொந்த நாட்டில் இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’