வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
EPRLF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EPRLF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 டிசம்பர், 2011

மார்கழி 13 -- புலிகள் ஈபிஆர்எல்எவ் ஐ அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன

“ர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ...தர்மம் மறுபடியும் வெல்லும்.” 1986 மார்கழி 13 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளில் துயர் தோய்ந்த ஒருநாள். விடுதலை இயக்கங்களை அழித்தொழித்து தனது ஏக அதிகாராத்தை நிலை நிறுத்தும் ஆசையில் பிரபாகரன் தனது ஆயுததாரிகளை ஈபிஆர்எல்எவ் மீது ஏவி விட்ட நாள்.

சனி, 19 நவம்பர், 2011

தோழர் பத்மநாபாவின் அறுபதாவது பிறந்த தினம் – நினைவுக் குறிப்புக்கள்


ன்று தோழர் பத்மநாபாவின் அறுபதாவது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்

தி.ஸ்ரீதரன் செயலாளர் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி
தோழர்களே எமது சர்வதேச கிளைகளின் மாநாட்டிற்காக நீங்கள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.சமூக தார்மீக நெறிமுறைகளுக்காக போராடுபவர்களை உலகின் எந்த தீய சக்திகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது

புதன், 23 ஜூன், 2010

EPRLF தோழர் நாபா 20வது வருட நினைவஞ்சலி நினைவு வீடியோ படல் தாய்லாந்து தோழர்கள்..!

(தோழர் நாபா பற்றிபாடல);

சனி, 19 ஜூன், 2010

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் ……

அகிம்சை தனை போதித்து அகிலம்
போற்ற வாழ்ந்தவர் தோழர் நாபா!
அடைக்கலம் தேடி வந்தோரை
அணைத்து முத்தமிட்டவர்… தோழர் நாபா!

வவுனியாவில் தியாகிகள் தினம்

இன்று சனிக்கிழமை மாலை வவுனியா நகர சபை மண்டபத்தில் வீரத்தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.



ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினா கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தின நிகழ்வு

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால யுத்தத்தின் போது 1165 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

புதன், 16 ஜூன், 2010

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மறைந்த உறுப்பினரின் நினைவுதினம் ஜூன் 19இல் வீடியோ இணைப்பு

20 வருடங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா உள்ளிட்ட 12 பேரின் நினைவுதினம் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.


தியாகிகள் தினம்

இடம்: 1703 1703 McCowan road

மக்கோவன்ஃ செப்பேட் (McCowan Road / Shepard Ave East))

ரொறன்ரோ Toronto)

கனடா

காலம்: ஜுன் 19, 2010 (சனிக் கிழமை) மாலை 5.00 – 9.00 வரை


விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு. எமது போராளிகள், பொதுமக்களின் தியாகத்தால் விளைந்த ஜனநாயக நிலமைகளை தொடர்ந்தும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்த விளைகின்றோம். கிடைத்திருக்கும் ஜனநாயக சூழலை பாவித்து எமது மக்களுக்கான சமாதான, சம உரிமை வாழ்வை உறுதிப்படுத்த தொடர்ந்தும் குரல் கொடுக்க இணைந்து செயற்படுவோம். பல்வேறு அமைப்புக்களின் செயற்பாடாளர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். அமைதி, சமாதானம், ஜனநாயகம், சமஉரிமை போன்றவற்றில் ஈடுபாடுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: ஈழ மக்கள் செய்திச் தொடர்பு நிலையம் (கனடா)

திங்கள், 29 மார்ச், 2010

எமது இனிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே! உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!




   ,yf;fk;: 6

     x
தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் தமது மாணவபிராயத்திலிருந்தே தமிழர்களின் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் உழைத்து வருபவர். இதனால் அவரது உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்ததுடன், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு ஆண்டுகாலமாக இராணுவக் கொத்தளங்களிலும் வெலிக்கடையிலும் சிறைவாசம் அனுபவித்தார். இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும் சிறைவாசக் கொடூரங்களுக்கும் உள்ளானார். தாம் கொண்ட கொள்கையில் உறுதியான தோழர் சிறிதரன் அவர்கள் மரணத்தின் வாயில்களைக் கண்டபோதிலும் தாம் தொடங்கிய இலட்சியப்பாதையில் பேராபத்துக்களின் மத்தியிலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய அணிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் எப்போதும் கண்ணியமாகவும் கனவானாகவும் நடந்து வந்துள்ள பண்பாளர். பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகாத உறுதியான நெஞ்சமும் நேர்மையான நடத்தையும் கொண்ட போராளி அவர்.

புதன், 24 மார்ச், 2010

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் பிரான்ஸ் அறைகூவல்விடுகின்றது!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மு;னனணி இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சகல சமூகப்பிரிவினரதும் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த இலட்சியங்களுக்காக இடையறாது பாடுபடும் கட்சி. எமது தமிழ் சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தியாகங்களை செய்த கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் யதார்த்த பூர்வமான தீர்வினை முன்வைத்து வலியுறுத்தி, செயற்பட்டு வரும் கட்சி. இந்தியாவுடன் இடையறாத நட்புறவை பேணி வரும் கட்சி.

பாராளுமன்றத் தேர்தல் 2010 தேர்தல் விஞ்ஞாபனம் - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி






இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மையினர்கள் என்பதால் காலம்காலமாக பற்பல இனரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை உரிமைகள்; ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லொணாத் துன்பங்களாலும் இழப்புக்களாலும்; வாழ்வில் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்; விரக்தியின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்க பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் இழப்புக்களும் வேதனைகளும், சோதனைகளும் கணக்கலடங்காது.


ஞாயிறு, 14 மார்ச், 2010

சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) இன் தேர்தல் பிரச்சாரம்

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் தி. ஸ்ரீதரன் தலமையில் ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) இனர் தமது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல மக்கள் ஆர்வமாக கலந்து வருகின்றனர். இடதுசாரி அமைப்புக்களை சேர்நதவர்கள் பலர் இவர்களுடன் இணைந்து வேலைசெய்து வருகின்றனர்.

புதன், 24 பிப்ரவரி, 2010

புளொட், இடதுசாரி, முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன்!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா) பொதுச்செயலாளர் சுகு தோழர் என்கிற சிறிதரன் அவர்களிடம் எமது இணையம் தொடர்பு கொண்டு எதிர்வரும் பொதுத்தேர்தல் நிலைவரம் தொடர்பில் கேட்டபோது தாம் புளொட், இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் மற்றும் மேலதிக விபரங்களை இன்றுமாலை அல்லது நாளைய தினத்திற்குள் அதிரடி இணையத்துக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஈபிஆர்எல்எப் தோழர் இளங்கோ மறைவு!!


கடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ சாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ(கணபதிபிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர். மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக அவர் வாழ்ந்தவர். எமது சமூகத்தின் சராசரி மனிதர்கள் போல் உலகத்தின் ஏதோவொரு மூலைக்குச் சென்று அவர் மிக சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும்.

பல்வேறு உடல் உபாதைகள் மத்தியில் துன்ப துயரங்களின் மத்தியில் அவர் நாட்டில் சக தோழர்களுடன் தோழராக வாழ்ந்தவர். 1986 புலிகள் இயக்கம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்த போது தோழர் இளங்கோவும் புலிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதைகளும், அவர் காண நேர்ந்த கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அந்த அனுபவங்களை பல தடவை தனது சக தோழர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர் அவர். அவரது தோழர்கள் நண்பர்கள் மத்தியில் தோழர் இளங்கோ மிகவும் இனிமையான, பண்புள்ள மனிதராகவே காணப்பட்டார். தோழர் இளங்கோ இருக்குமிடம் எப்போதும் கலகலப்பானதாக இருக்கும். அவருடைய சமூகப் பார்வையில் ஆழமான பொருள் பொதிந்த இயல்பு காணப்படும். ஒரு வசீகரமான மனிதர் அவர். எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். ஜனநாயக இடைவெளியை உருவாக்குவது பற்றியும் மக்களின் சுதந்திரமான வாழ்வு பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.

அவருடைய மனைவியார் சிவசக்தி அவர்களும் அவருடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்திருந்தார். தனது சமூக அரசியல் அக்கறைகளுக்கு மத்தியில் தமது பி;ள்ளைகளின் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளிலும் அவர் அக்கறை செலுத்தினார். எப்போதும் சோம்பிக் கிடப்பவரல்ல அவர். உழைப்பின் மகத்துவத்தை அவர் உணர்ந்தவர். சங்கீதம், பாடல்கள், இசை பற்றிய ஞானம் அவருக்கு இருந்தது. இவற்றை இவற்றை நேர்த்தியாக தொகுப்பதிலும் அவர் ஆற்றல் பெற்றிருந்தார்.

அவரது தந்தையார் கணபதிப்பிள்ளை ஒரு கவிஞர். கலைஞர்,அவருடைய இரு சகோதரர்கள் சமூக விடுதலை இயக்கத்தில் பங்குபற்றியவர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபையில் அவர் அங்கத்தவராக இருந்தவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பிரச்சார பணிகளில் முக்கிய பங்காற்றியவர். இடர்மிகுந்த காலங்களில் எல்லாம் அவர் எம்மோடு நின்றிருந்தார். கட்சியின் திசைவழி அன்றாட அரசியல் நிகழ்வுகள் நீண்டகால இலக்குகள் தொடர்பான கூர்மையான அவதானமும் கரிசனையும் அவருக்கிருந்தது. உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் வாழும் தோழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். தோழமைக்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்.

51 வயது என்பது ஒரு குறுகியகால பகுதியே. அடிக்கடி நோய்வாய்படுதல், பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு மத்தியில் வன்னி முகாம்களில் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படும் இடங்களுக்கு சக தோழர்களுடன் சென்று அவர்களை பார்வையிட்டவர். தோழர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றினார். கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எப்போதும் அவர் சோர்வடைந்ததில்லை. யாழ், மட்டுநகர், வன்னி, திருமலை தமிழகம் என பல இடங்களிலும் மனிதர்களுடன் உறவாடிய அனுபவம் அவருக்கு இருந்தது. எப்போதும் தனக்கென பாதுகாப்பான வாழ்க்கையொன்றை தேடிக்கொண்டவரல்ல அவர். நெருக்கடிகள் மத்தியில் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலான காலம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். எமது சமூகத்தில் நிலவிய அராஜகம் அவரை பெரும் கொந்தளிப்பும் புயலுமாக இருந்த சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்தித்தது. அவர் மெலிதானதும், மனிதாபிமான ஈரமும் ஜனநாயக உணர்வும் கொண்ட மனிதராகத்தான் வாழ்ந்தார். பெப்ரவரி 06ம் திகதி அதிகாலை பொழுதில் அவர் நிரந்தரமாக உறங்கிவிட்ட செய்தி எம்மை வந்தடைந்தது. தோழர் இளங்கோ அவர்களுக்கு எம் இதய அஞ்சலிகள்..!!!
-பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

செவ்வாய், 15 டிசம்பர், 2009

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பண்பாடு எமது சமூகத்தில் மீள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

.

-மனித உரிமை நிகழ்வில் ஸ்ரீதரன் உரை

sritharan-2இந்த வீரசிங்கம் மண்டபத்தின் கடந்த கால நிகழ்வுகள் என் மனத்திரையில் நிழலாடுகின்றன.தமிழராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் ஒன்பது தமிழர்கள் பலியான சம்பவம் இந்த மண்டபத்தின் முன்றலில்தான் நடைபெற்றது.

அமிர்தலிங்கம், சண்முகதாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் உரைகளை இம் மண்டபத்தில் செவிமடுத்திருக்கிறேன். தந்தை செல்வாவின் பூதவுடல் இங்குதான் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சங்காரம் உள்ளிட்ட பல அரங்காற்றுகைகள் இம் மண்டபத்தில் நிகழ்ந்தன

இதற்கு அண்மையில் உள்ள பண்ணைக் கடலில்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் வந்ததன் பின் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் ஆகிய இளைஞர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நாட்களில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எமது மக்களின் வாழ்வு துயரமான ஒரு பாதையில் பயணித்தது.

இன்று எல்லாவற்றையும் கட்டுடைத்து பார்க்க வேண்டும். முன்னாள் யாழ் நகரபிதா அல்பிரட் துரையப்பாவின் படுகொலையிலிருந்து இப்போது நாம் பார்க்க வேண்டும்.

மனித உரிமை நிகழ்வில் ஸ்ரீதரன் உரை

இந்த வீரசிங்கம் மண்டபத்தின் கடந்த கால நிகழ்வுகள் என் மனத்திரையில் நிழலாடுகின்றன.

தமிழராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் ஒன்பது தமிழர்கள் பலியான சம்பவம் இந்த மண்டபத்தின் முன்றலில்தான் நடைபெற்றது.

அமிர்தலிங்கம், சண்முகதாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல்
தலைவர்களின் உரைகளை இம் மண்டபத்தில் செவிமடுத்திருக்கிறேன். தந்தை செல்வாவின் பூதவுடல் இங்குதான் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சங்காரம் உள்ளிட்ட பல அரங்காற்றுகைகள் இம் மண்டபத்தில் நிகழ்ந்தன

இதற்கு அண்மையில் உள்ள பண்ணைக் கடலில்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் வந்ததன் பின் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் ஆகிய இளைஞர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நாட்களில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எமது மக்களின் வாழ்வு துயரமான ஒரு பாதையில் பயணித்தது.

இன்று எல்லாவற்றையும் கட்டுடைத்து பார்க்க வேண்டும். முன்னாள் யாழ் நகரபிதா அல்பிரட் துரையப்பாவின் படுகொலையிலிருந்து இப்போது நாம் பார்க்க வேண்டும்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பண்பாடு எமது சமூகத்தில் மீள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அரச பயங்கரவாத வன்முறைகளுக்கப்பால் எமது சமூகத்தில் நிகழ்ந்த வன்முறைகளைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். தீண்டாமை கொடுமைக்கு கொடூரமாக பலியான அண்ணாசாமி போன்றவர்களையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் தலைவர்கள் வௌ;வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் சமூகம் தொடர்பாக அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 23 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இன்னல்கள் சிரமங்கள் மத்தியில் வாழ்கிறார்கள். சொந்த ஊரை இழப்பது எவ்வளவு கொடுமையானது. பிறந்து வளர்ந்த ஊர் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும். கோயில், குளம், பாடசாலை, காதல், சிறு சிறு குழப்படிகள் என பல விடயங்களின் மனப்பதிவு அது. ஒரு மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு.

இதே பிரச்சினை முஸ்லீம் மக்களுக்கும் உண்டு. சோனகத்தெருவில் சென்றுதான் சாக வேண்டும் என்ற கனவுடன்தான் வாழ்ந்தார்கள். பலரின் கனவு புத்தளத்துடனேயே நிராசையானது.

நாம் வெவ்வேறு கருத்துக்களுடன் நாகரிகமாக உறவாடப் பழகிக்கொள்ள வேண்டும்.

வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியலில் பெண்களின் பிரசன்னம் அரிதாகவே இருந்தது.

போராசிரியர் ரஜனி திரணகம, சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் போன்ற மனித உரிமைவாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் வேறுபாடுகள் கொண்டவர்களை துரோகிகள் கைக்கூலிகள் என்று தீண்டாமை, பாராட்டும் போக்கு எமது சமூகத்தில் ஆதிக்கம் வகித்தது, வகிக்கிறது.

மனித உரிமைகள் இல்லத்தின் செரின் சேவியர் போன்றவர்கள் அந்த விடயத்தில் ஆரோக்கியமான முன்மாதிரி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

வெவ்வேறு கருத்துநிலை கொண்ட அரசியல் கட்சியினரை, சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஓரிடத்தில் அமரச்செய்து இவர்கள் ஒன்றாக சென்று அகதி மக்களை பார்க்க அனுமதி பெற வேண்டும் என்ற முனைப்பில் யுத்தம் முடிவடைவதற்கு முந்திய ஏப்பிரல் மாதத்திலேயே ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டவர்.

எமது சமூகத்தில் இளந்தலைமுறைத் தலைவர்கள் உருவாக வேண்டும்.

இங்கு நிகழ்ந்த அரங்காற்றுகை ஒற்றுமையை வலியுறுத்தியதாகவும் மனிதத்தின் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவதும், சுயமரியாதை கௌரவத்துடன் கூடிய வாழ்வு கிட்டுவதும் இன்றைய ஜீவாதாரமான விடயங்கள் என்றும் குறிப்பிட்டார்.

அரச பயங்கரவாத வன்முறைகளுக்கப்பால் எமது சமூகத்தில் நிகழ்ந்த வன்முறைகளைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். தீண்டாமை கொடுமைக்கு கொடூரமாக பலியான அண்ணாசாமி போன்றவர்களையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் தலைவர்கள் வௌ;வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் சமூகம் தொடர்பாக அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 23 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இன்னல்கள் சிரமங்கள் மத்தியில் வாழ்கிறார்கள். சொந்த ஊரை இழப்பது எவ்வளவு கொடுமையானது. பிறந்து வளர்ந்த ஊர் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும். கோயில், குளம், பாடசாலை, காதல், சிறு சிறு குழப்படிகள் என பல விடயங்களின் மனப்பதிவு அது. ஒரு மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு.

இதே பிரச்சினை முஸ்லீம் மக்களுக்கும் உண்டு. சோனகத்தெருவில் சென்றுதான் சாக வேண்டும் என்ற கனவுடன்தான் வாழ்ந்தார்கள். பலரின் கனவு புத்தளத்துடனேயே நிராசையானது.

நாம் வெவ்வேறு கருத்துக்களுடன் நாகரிகமாக உறவாடப் பழகிக்கொள்ள வேண்டும்.

வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியலில் பெண்களின் பிரசன்னம் அரிதாகவே இருந்தது. போராசிரியர் ரஜனி திரணகம, சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் போன்ற மனித உரிமைவாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் வேறுபாடுகள் கொண்டவர்களை துரோகிகள் கைக்கூலிகள் என்று தீண்டாமை, பாராட்டும் போக்கு எமது சமூகத்தில் ஆதிக்கம் வகித்தது, வகிக்கிறது.

மனித உரிமைகள் இல்லத்தின் செரின் சேவியர் போன்றவர்கள் அந்த விடயத்தில் ஆரோக்கியமான முன்மாதிரி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

வெவ்வேறு கருத்துநிலை கொண்ட அரசியல் கட்சியினரை, சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஓரிடத்தில் அமரச்செய்து இவர்கள் ஒன்றாக சென்று அகதி மக்களை பார்க்க அனுமதி பெற வேண்டும் என்ற முனைப்பில் யுத்தம் முடிவடைவதற்கு முந்திய ஏப்பிரல் மாதத்திலேயே ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டவர்.

எமது சமூகத்தில் இளந்தலைமுறைத் தலைவர்கள் உருவாக வேண்டும்.

இங்கு நிகழ்ந்த அரங்காற்றுகை ஒற்றுமையை வலியுறுத்தியதாகவும் மனிதத்தின் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவதும், சுயமரியாதை கௌரவத்துடன் கூடிய வாழ்வு கிட்டுவதும் இன்றைய ஜீவாதாரமான விடயங்கள் என்றும் குறிப்பிட்டார்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

மீள் குடியேறியவர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்




- பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன்

நேர்காணல் - ஜேம்ஸ்

முகாம்களிலிருந்து மீள் குடியேறிய மக்கள் முன்னர் வாழ்ந்த இடம் முற்று முழுதாக அழிந்து போயிருக்கின்ற நிலையில் மற்றைய பகுதிகளில் இயல்பாக வாழ்பவர்களைவிட அவர்களுடைய தேவைகள் பாரியதாகவே இருக்கின்றன.

ஐயாயிரம் ரூபாய் அவர்களுடைய கையில் கொடுத்திருப்பதாகவும் இருபதாயிரம் ரூபாய் வங்கியில் போடப்படும் எனவும் சொல்லப்பட்டிருப்பதோடு ஆறுமாத காலங்களுக்கு நிவாரணம் கொடுப்பதாக சொல்லியிருந்தாலும் அம் மக்களுடைய தேவைகள் இன்னும் அதிகமாகவேதான் இருக்கின்றன. அவர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன் கூறினார். மன்னார் மாந்தை மேற்கில் இடம் பெற்றுவரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிடும் பொருட்டு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டருந்த அவர் வீரகேசரி வார வெளியீட்டிற்காக அளித்த விசேட செவ்வியொன்றின்போதே இவ்வாறு கூறினார். அவர் அளித்த செவ்வி விவரம் பின்வருமாறு

கேள்வி:- அண்மையில் மாந்தை மேற்குப் பிரதேசதத்pல் அரசாங்கம் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அவசர அவசரமாக முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் நீங்கள் அப் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறீர்கள். இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் உங்களுக்கு திருப்தி இருக்கின்றதா?

பதில் பிரதானமாக வன்னியில் இருந்து மிகப்பெரிய அவலங்களுடன் இடம் பெயர்ந்து இன்று முகாம்களில் வாழுகின்ற மக்களைப் பார்வையிடுவதும், அதேவேளை தற்போது அவர்கள் மீள் குடியேற்றப்பட்ட இடங்களுக்குச் சென்று அவர்களுடைய குறைநிறைகளை அபிலாசைகளை கேட்டறிந்து கொள்வதுமே எனது விஜயத்தின் முக்கிய நோக்கம். இந்த முகாம்களில் இருந்து மக்கள் மீள் குடியேற்றத்திற்காக தமது சொந்தப் பிரதேசங்களுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றiஉம மற்றும் அவர்கள் மீளக் குடியேற்றப்படுகின்ற நடவடிக்கைகளை முன்னேற்றகரமான நடவடிக்கை என்றுதான நாங்கள் கருதுகின்றோம்;. ஏனென்றால் மக்கள் மீள் குடியமர்த்தப்படுவது மிக மிக அவசியமான விடயம். அவர்கள் சொந்த இடங்களில் கௌரவமாகவும், சுயமரியாதையாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பது முக்கியம். தினமும் இரண்டாயிரம், மூவாயிரம் பேர் என்று கடந்த மூன்று வாரங்களாக மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆந்த விடயம் இன்னும் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அப் பகுதிகளுக்குச் சென்றிருக்கும் மக்களுக்குரிய வசதிகள் அதாவது ஐயாயிரம் ரூபாய் அவர்களுடைய கையில் கொடுத்திருப்பதாகவும் இருபதாயிரம் ரூபாய் வங்கியில் போடப்படும் எனவும் சொல்லப்பட்டிருப்பதோடு ஆறு மாத காலங்களுக்கு நிவாரணம் கொடுப்பதாக சொல்லியிருந்தாலும் அம் மக்களுடைய தேவைகள் இன்னும் அதிகமாகவேதான் இருக்கின்றன.

அவர்கள் இருந்த இடம் முற்று முழுதாக அழிந்து போயிருக்கின்ற நிலையில் மற்றைய பகுதிகளில் இயல்பாக வாழ்பவர்களைவிட அவர்களுடைய தேவைகள் பாரியதாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் இருப்பதற்குரிய வீடு, அவர்களுடைய சுகாதாரம், பிள்ளைகளுடைய கல்வி அவர்களுடைய தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளடங்களாக அவர்களுடைய பாதுகாப்பு இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் கோரிக்கைகள் உள்ளன.

முகாம்களில் மீதமாக இருக்கின்ற ஒன்றரை இலட்சம் மக்களும் விடுவிக்கப்பட்டு ஒரு திருவிழாக் கோலம் போன்று மக்கள் தங்களுடைய இடங்களுக்கு மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என நாங்கள் எதிர் பார்க்கி;ன்றோம்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பெரும்பாலான மக்கள் பதினைந்து இருபது தடவைகளுக்கு மேல் மாறி மாறி இடம் பெயர்ந்து எல்லாவற்றையும் இழந்து வீசிய கையும் வெறும் கையுமாக சென்ற இந்த மக்கள் இந் நாட்டின் செல்லப் பிள்ளைகளாக நடத்தப்பட வேண்டும் இவர்களுக்குள் ஊனமுற்றவர்கள், கை கால்கள் இழ்ந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், உற்றார் உறவினர்களை இழந்தவர்கள், எல்லாம் இருக்கின்றார்கள். இவர்களை இந்த நாடே முன்னின்று அவர்கள் சிறப்பாக வாழ்வதற்குரிய வழியை செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

கேள்வி:- மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மக்களுடைய அன்றாட வாழ்வு முழுமையான இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக நீங்கள் உணருகின்றீர்களா?

பதில்:- நிச்சயமாக நாங்கள் அவ்வாறு கருதவில்லை. மக்கள் இயல்பாக வாழ வேண்டும். அதற்கு போக்குவரத்துக்கான பாதைகள் தங்குதடையின்றி திறந்துவிடப்பட வேண்டும் ஏ-9 வீதியூடான போக்குவரத்து அடையாள அட்டையை மாத்திரம் கொடுத்து பயணம் செய்ய முடியும். பாதுகாப்பு பத்திரம் அனுமதி தேவையில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும் இன்னும் அந்த நடவடிக்கை மெதுவாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிரயாணத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சிக்கல்களை முற்றுமுழுதாக நீங்க வேண்டும். ஏனெனில் நாங்கள் இந்த நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகின்றோம். ஆனால் மனிதனுடைய நாளாந்த நடவடிக்கைகளில் பாதுகாப்பு எனும் பெயரில் அனுமதி பத்திரம் எடுப்பதிலும் வேறு விடயங்களிலும் காலம் செலவிடப்படுகின்றமை பொருளாதார நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மந்தமடையச் செய்வதாகத்தான் இருக்கின்றது. அத்தோடு நாளாந்த இயல்பு வாழ்க்கையும் தேக்க மடையும்.

ஒரு பாரிய வீச்சான சமூகப் பொருளதார அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால் மக்களுடைய வாழ்க்கை இலகுபடுதத்ப்பட வேண்டும். மக்களுடைய மனதில் எந்த விதமான சஞ்சலமும் இருக்கக்கூடாது. அந்த சஞ்சலங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கருதுகின்றோம்.

இதைத்தான் பல தடவைகள் அரசாங்கத்திடமும், ஜனாதிபதி அவர்களிடமும் கூட வலியுறுத்தியிருக்கின்றோம்.

இதைத் தொடர்ந்தும் நாங்கள் சொல்லிக் கொண்டேயிருப்போம். அது மாத்திரமல்ல நாங்கள் ஏற்கனவே முகாம்களில் வசிப்பவர்கள். மீள் குடியேற்றப்படுகின்றவர்களின் துயரங்கள் பற்றியும் துன்பங்கள் பற்றியும் சொல்ல வேண்டிய இடங்களில் நாங்கள் சொல்லியே ஆக வேண்டும்.


கேள்வி:- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டம் முடிவற்றிருப்பதாக சொல்லப்பட்டாலும் அதை தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஒரு முடிவாக கருதிவிட முடியுமா?

பதில்: நிச்சயமாக எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதாவது இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் அந்த அபிலாசைகள் என்னவென்று சொன்னால் தமிழ் மக்கள் இந்த நாட்டில் தாங்கள் சிங்கள மக்களோடு சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வந்திருக்கின்றார்கள். துரதிஷ்டவசமாக அது பிரிவினை வரைக்கும் போயிருக்கிறது.

ஆனாலும் அந்தக் கோரிக்கையின் சாராம்சம் இந்த நாடு ஒரு பல் இனங்களின் நாடாக எல்லா மக்களும் எல்லா இன சமூகங்களும் சமத்துவமாக வாழ வைக்கப்பட வேண்டும். என்பதைத்தான் அது உள்ளடக்கியிருந்தது.

ஏங்களுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த இடத்தில் நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தது. தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு உலக அளவில் இருந்த ஆதரவு வேறெந்த விடுதலை இயக்கத்திற்கும் உலகத்தில் இருந்திருக்கவில்லை. நாங்கள் இந்தி-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு எல்லோரும் அதனை ஏற்றுச் செயற்பட முன் வந்திருக்க வேண்டும். அல்லது அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து விவாதித்து செயற்பட முன் வந்திருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் சந்திரிகா அம்மையார் பதவிக்கு வந்த நேரத்தில் ஒரு சமஷ்டி முறையைப பரிந்துரைத்த போது நாங்கள் அந்த விடயங்களை செயற்படுத்த முன் வந்திருக்க வேண்டும் அதுவும் சரிவரவில்லை என்றால் இறுதியாக ஒஸ்லோவில் உதவி வழங்கும் நாடுகள் ஒரு தீர்மானம் எடுத்து ஒரு தீர்வை முன்மொழிந்த போது அந்த தீர்வையாவது பற்றிப் பிடிக்க முன் வந்திருக்க வேண்டும்.

ஏந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் சமரசத்திற்கான இடம் உண்டு எங்களுக்கு பலஸ்தீனம் நல்ல உதாரணம். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நல்ல உதாரணம். யாசீர் அரபாத் போன்ற தலைவர்கள் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் ஒரு கட்டத்தில் சமரசத்திற்குப் போனார்கள். ஆனால் எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் கை நழுவ விட்டு உட் பகைகளை மட்டும் வளர்த்து உரு சமூக சிதைவு இயக்கமாக மாறி விடுதலை இயக்கமாக இருக்காமல் போனதன் விபரீத விளைவுதான் கடைசியாக நடந்த சம்பவங்கள் என்று நினைக்கின்றோம். ஆனபடியால் அதை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முடிவு என்று நாங்ள் கருதவில்லை.

தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்கள் சமத்துவமாக வாழும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார்கள் அந்தக் கோரிக்கை ஜனநாயக பூர்வமானது. ஆந்தக் கோரிக்கைகள் காலவோட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சமகால உலக அரசியலில் ஒற்றைப் போக்கு அல்லது மேலாதிக்க மனோ நிலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. தனி மனிதனின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற ஒரு நாட்டில் உள்ள சமூகங்களின் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறான விடயத்தை நோக்கி இந்த நாடு முன்னேற வேண்டும் என நாங்கள் எண்ணுகின்றோம்.

கேள்வி:- தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணி சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பு பற்றி பேசப்படுகின்றது. அது எதனை இலக்காகக் கொண்டதாக அமைய இருக்கின்றது.?

பதில்:- நாங்கள் எதிர்கட்சி கூட்டணியைப் பற்றி பேச விரும்பவில்லை. அதில் நாங்கள் சம்பந்தப்படவில்லை. சிறுபான்மை சமூகம் என்ற வார்த்தையில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதாவது நாட்டில் எண்ணிக்கையில் குறைவான தேசிய சமூகஙகள் என்றுதான் அதை சொல்ல வேண்டும். சிறுபான்மை என்பதற்குள்ளேயே ஒரு ஒடுக்குமுறையை நாங்கள் ஏற்றுக் கொள்ளுவோமா? ஏன்று எங்களுக்குள்ளேயே நாங்கள் கேட்க வேண்டியிருக்கிறது.

இன ரீதியான பாரபட்சங்கள் இருக்கின்றது எனும் அடிப்படையில் அதை நிவர்;த்தி செய்வதற்காக இந்த சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. உதாரணமாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றது. அதேபோன்று கிழக்கில் நிலங்கள் ஆக்கிரமித்தல் தொடர்பான கேள்விகள் கோரிக்கைகள் இருக்கின்றது.

அது முஸ்லீம் சமூகத்திற்கும் இருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கும் இருக்கிறது. அதே மாதிரியான வேறு பல விடயங்களும் இருக்கின்றது.

ஒரு அதிகாரப் பகிர்வு அல்லது ஒரு அலகு தொடர்பாக குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ளதைப் போல் மாநிலம், மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற முறை சமூகங்களுக்கு அதிகரங்கள் வழங்கப்படுவது தொடர்பான அக்கறைகள் எங்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற தேசிய சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றது என நாங்கள் கருதுகிறோம்.

கேள்வி:- தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பேசும் சமூகங்களிடம் எஞ்சியிருக்கின்ற புத்திஜீவிகளாவது ஒன்றிணைந்து நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை எந்த வகையில் முன்னெடுப்பது சாத்தியமாக அமையும்?

பதில்:- எங்கள் முன் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று 13வது திருத்தச் சட்டம் இருக்கின்றது. மற்றையது அனைத்துக் கட்சிகளும் இணைந்து எடுத்துக்கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் தீர்மானங்கள். இந்த இரு விடயங்களை பற்றி எங்கள் மத்தியில் இருக்கக்கூடிய புத்தி ஜீவிகள் செயல்முறை இல்லாத கருத்துக்களைச் சொல்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான ஒரு பெறுபேறாக மக்களுக்குக் கிடைக்கக்கூடிய விதத்தில் இங்குள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்களுக்கு கிடைக்கக்கூடிய விதமாக எதிர்காலத்தில் நடக்க வேண்டும். எழுத வேண்டும். மக்களோடு பேச வேண்டும். அதற்குரிய கருத்துக்களை அரசிடம் அரசியல் தரப்புக்களிடம் வலியுறுத்த வேண்டு;ம்.

கேள்வி:-- தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஆரோக்கியமான அணி ஒன்றை உருவாக்கினால் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறலாம் என கருதப்படுகின்றது. இது தொடர்பான உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: சிறுபான்மை தேசிய சமூகங்களினதும் இடதுசாரிகளுடைய ஐக்கியத்தையும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தாமல் பார்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் எங்களுக்குள் ஒரு உறவு இருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. யார் வந்தாலும் எங்களுடைய சமூகங்களின் பிரச்சினைகளை நாங்கள் சொல்ல வேண்டும். வலியுறுத்த வேண்டும். அதில் எங்களுக்குள் ஒரு மனம் திறந்த உறவு இருக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்கின்ற சமூகங்கள் என்ற வகையில் எங்களுடைய அரசியல் தனித்துவங்கள் வௌ;வேறு நிலைப்பாடுகளுடன் குறிப்பாக எங்களுடைய சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்வதற்கும் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் சமூகங்களுக்கிடையில் உறவு தேவை. அதேநேரம் இடதுசாரிகள் தொடர்பாக இங்கு நான் குறிப்பிடுவது என்னவென்றால் வரலாற்றில் நாம் பகிரங்கமாகச் சொல்லப் போனால் கூடுதலான காலப்பகுதியில் அவர்கள்தான் நேர்மையாக இருந்திருக்கிறார்கள். சுpல இடதுசாரிகள் விதிவிலக்காக இருந்திருக்கலாம்.

தமிழ் சமூகத்திற்கும் மிக எண்ணிக்கையில் குறைவாகவுள்ள தேசிய சிறுபான்மை இனத்தவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளித்தல் ஊடாக நாட்டை ஐக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதேவேளை சிறுபான்மை இனத்தின் தலைவர்களாக இருந்து மறைந்து போன தொண்டமான், மற்றும் அஷ்ரப் ஆகியோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏராளம் இருக்கின்றன. இதைவிட முற்போக்கு சக்திகள் மற்றைய கட்சிகளில் இருக்கக்கூடிய இந்த பிரச்சினைகளை ஆதரிக்கக் கூடிய ஆட்களோடும் நாங்கள் உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.

நன்றி – வீரகேசரி வார வெளியீடு (22-11-2009)

வியாழன், 19 நவம்பர், 2009

அண்ணல் மகாத்மா தோழர் க.பத்மநாபா அவனியில் அவதரித்த நாள் இன்று 19.11.1951-19.11.2009



அகிம்சைக்கு என்றும்
அத்திவார தாங்கியாக
அமைந்த அறிவின் சிகரம்
அன்பின் தோழமையின் மைந்தன்
அண்ணல் மகாத்மாதோழர் பத்பநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரவணைக்கும் கரங்களுடன்
அதிசயமனிதனாக - உலகில்
அன்பை சுமந்து வலம் வந்த
அவதாரம் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரக்க குணம் படைத்துதோரையும்
அணைத்து முத்தமிட்டு
அறிவியல் கதைசொல்லும்
அத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அற்புத மனிதனாக மக்களிடம் இருந்து
அச்சத்தைவிரட்டியடித்து--மனங்களில்
அதிவீரத்தை தந்த புருசனவன்
அகராதியில் முதல் வார்த்தையாக
அமைந்த எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்
அதிசய துப்பாக்கிக்கு - அன்று
அப்பாவியாக இன்னுயிர் நீத்த
அருமை தோழனவன் என்றும்
அறம் பொருள் இன்பம் - இவை
அனைத்திற்கும் மறுநாமம்
அகிலத்தில் தோன்றிய தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அன்னை மடி(இந்தியா) பாசத்தின்
அணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று
அறைகூவலுடன் கூறிய
அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று

அல்லும் பகலும் மக்களை சுமந்து
அடிமை விலங்கினை உடைப்போம் என்று
அமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து
அதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று

அணிவகுத்து நின்ற தோழர்களின்
அகத்தில் நல்ஆசானாக
அள்ளித்தந்த அரசியல் வார்த்தைகளினால்
அரும்பெரும் வடிவம் தந்த
அதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அமைதியாக நடைபோட்டு
அன்னை மண்ணில் ஆற்றிய தொண்டுகள்
அத்தனைக்கும் அதாரமாய் மக்கள் மனதில்
அன்பைமட்டும்போதித்து அழியாத இடம்பிடித்து
அகிலம் போற்றும் எங்கள் தோழன்
அண்ணல் மாகாத்மா பத்மநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம்அவன் பாசிசம் தோழா
அதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா
அமைதிபோராட்டம் செய்வோம் தோழா
அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா
அனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்

புரட்சிவேட்கை...தோழமையுடன் உங்கள் தோழர்கள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சுவீஸ் கிளை