வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 தேர்தல் விஞ்ஞாபனம் - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி






இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மையினர்கள் என்பதால் காலம்காலமாக பற்பல இனரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை உரிமைகள்; ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லொணாத் துன்பங்களாலும் இழப்புக்களாலும்; வாழ்வில் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்; விரக்தியின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்க பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் இழப்புக்களும் வேதனைகளும், சோதனைகளும் கணக்கலடங்காது.


தமிழ்மக்களின் உடனடித் தேவைகள்

இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை மீளமைய வேண்டும். அதற்கான அவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகளாக:

• சீரான இல்லம் வேண்டும்;;;

• வேண்டிய உடைகள் வேண்டும்;.

• சுகாதாரமான சூழல் வேண்டும்;

• வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு உரிய தொழில் வேண்டும்.

• பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும்,

• இலங்கையில் எங்கும் செல்ல இலகுவான போக்குவரத்தும் மற்றும் சர்வதேச தொடர்பு வசதிகளும் வேண்டும்;.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின்  நிலைப்பாடு

எமது கட்சியாகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடானது, தமிழ்பேசும் மக்களின் தேவைகள் நிறைவேறி, இலங்கைவாழ் சமூகங்கள் அனைத்தும் சமாதானத்துடனும், சமூக, கலாச்சார, பொருளாதார மேம்பாட்டுகளுடனும் வாழும் உயர் நிலைமையை அடைய வேண்டுமாயின்:

• வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுய நிர்ணய அதிகாரங்கள் கொண்ட அரசியற் தீர்வு வேண்டும்.

• அங்கு உண்மையான ஜனநாயகச் சூழல் நிலவி, ஜனநாயக அரசியல் பேணப்படவேண்டும்.,

• அப் பிரதேசங்களில்; விரைவான பொருளாதார அபிவிருத்திகள் நடைபெற வேண்டும்.

• மனித உரிமைகள் மதிக்கப்படும் சுதந்திரமான சூழல்கள்  வேண்டும்;.

• மனித உரிமை தனி மனித சுதந்திரம் ஜனநாயகம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சுயாதீனமான நிறுவனங்கள் சமூகத்தில் அனுமதிக்கப்படவும், ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

• இனம் சாதி மத பேதங்களற்ற சமாதானமும் சமத்தவமும் காக்கப்பட வேண்டும்.

• அமைதியும், சமாதானமும் மகிழ்ச்சியும் தவழும் தேசம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

இவை கிட்ட வேண்டுமாயின்:-

• தமிழ் மக்கள் தமது பகுதிகளில் தமது அலுவல்களை தாமே பார்த்துக் கொள்வதற்கு உரிய வகையில் நிலம், கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்திகள், பொலிஸ் விடயங்கள், நகர விருத்திகள், கிராம முன்னேற்றங்கள் போன்ற விடயங்களில் சுயநிர்;ணய உரிமைகள் கொண்டிருக்க வேண்டும்;. இந்த அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

• இலங்கையின் மத்திய அரசாங்க முறைமையில் தமிழர்களும் உரிய பங்காளர்களாக ஆக்கப்பட வேண்டும்.

• இனவாதங்கள் மதவாதங்கள் அற்ற ரீதியில் இலங்கையில் கல்வியும், அரசாங்க உத்தியோகங்களும் வழங்கப்பட வேண்டும்.

• தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்களை திட்டமிட்டுக் குடியேற்றி தமிழர்களின் பொருளாதார வாழ்வை அச்சுறுத்தும் நிலை இல்லாதொழிய வேண்டும்:

• இலங்கையின் அரச படைகள் சிங்களப்படைகள் என்ற நிலை மாறி அனைத்து இனத்தவர்களையும் உரிய அளவு கொண்ட உண்மையான தேசியப்படைகளாக ஆக்கப்படுதல் வேண்டும்.

தமிழர் அரசியலில் ஈபிஆர்எல்எவ் இன் பங்களிப்பு

• 1988ல் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு அரசியல் அதிகார பகிர்வு முறையை நடைமுறை சாத்தியமாக்கினோம்.

• குறுகிய காலமாக இருப்பினும் அதுவொரு நம்பிக்கை தரக்கூடிய வெற்றிகரமான முயற்சியாக நாங்கள் முன்னெடுத்தோம்.

• எமது கட்சியைச் சார்ந்த சிறந்த கல்விமானும், புத்திசாதுரியமும், தீர்க்கதரிசனமும் மிக்க தோழர் வரதராஜபெருமாள் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கின் முதல் தமிழ் முதலமைச்சராகப் பணியாற்றினார். அந்த மாகாண அரச முறைமை சீர்குலைக்கப்படாது இருந்திருந்தால், தமிழர்களின் சக்திகள் ஒற்றுமையாக அதனை அன்று செயற்படுத்தியிருந்தால், இன்று இந்த நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. 20 வருடங்களுக்கு முன்னரே இழப்புக்களையும் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். தமிழர்களின் ஒற்றுமை, தமிழக மக்களின் அரவணைப்பு, இந்தியாவின் அதரவு, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து நின்றிருப்பார்கள்.

தமிழர்களால் இன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள்

கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத தலைவிதியால் தவறிப் போய்விட்டன. எனினும், இனியாவது எதிர்காலத்தைக் குறித்து தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தீர்மானங்களை உறுதியாகவும்,  நிதானமாகவும், சரியாகவும் மேற்கொள்ள வேண்டும்:-

• வாக்கில் உண்மையும் நடத்தையில் நேர்மையும் அரசியலில் வல்லமையும் கொண்டவர்களையே தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.

• தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வன்முறையற்ற பாதைகளில் மக்களை நேரடிப் பங்காளர்களாக அணி திரட்டிப் போராடக் கூடியவர்களையே தலைவர்களாகக் கொள்ள வேண்டும்.

• தமிழர்கள் மத்தியில் இருந்து மீண்டும் சுயநலமற்ற, சுய தியாகங்கள் செய்யும் தலைவர்கள் உருவாக தமிழர்கள் அங்கீகாரம் வழங்குதல் வேண்டும்.

• கடந்த தேர்தலில் பணம் பதவி சுகபோகங்களுக்காக ஆசை கொண்ட ஒரு சுயநலக் கூட்டத்தினரை புலிகள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்களோ சிங்களத் தலைவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் எந்த நம்பிக்கைக்கும் உரியவர்களாக நடந்து கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். இப்போது அவர்கள் நாலு குழுக்களாகப் பிரிந்து நின்று ஆளுக்காள் பாராளுமன்றப் பதவிக்காக குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டள்ளனர். இவர்களா தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போகிறார்கள்? இவர்கள் அனைவரும் தமிழர்கள் மத்தியில் வீராவேசமாகப் பேசுவார்கள். அளவற்ற ஆசை வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் கொழும்பு சென்று தமிழர்களின் உரிமைகளை மறந்து விடுவார்கள், அல்லது விற்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்களை தமிழர்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் என்னும் நிலையை இனியாவது ஏற்படுத்த வேண்டும்.

• இனப்பிரச்சினைக்கு இந்தியாவினதும், மற்றைய உலகநாடுகளினதும் உதவியுடன்  தீர்வு காண கிடைத்த பல சந்தர்பங்களை நாம் தவற விட்டுவிட்டோம். இனிமேலும் அத்தகைய தவறுகளுக்கு நாம் இடமளிக்கப் படாது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாறு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர்:

• தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழவேண்டிய ஒரு தேசிய இனம் என்பதை நிலைநாட்டுவதற்காகக் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருபவர்கள்.

• இலங்கை சிங்களமக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும்  சமஉரிமை கொண்ட நாடு என்பதை நிலைநாட்டுவதில் உறுதியாகச் செயற்பட்டு வருபவர்கள்.

• தமிழர்கள் மத்தியில் சாதி, மத பேதங்களை இல்லாதொழிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் விடாது போராடி வருபவர்கள்.

• தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் அரசியற் சக்திகள் மத்தியில் உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்காக நேர்மையாக உழைத்து வருபவர்கள்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்

தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் உயரிய இலட்சியங்கள். தமிழ் மக்களின் உடனடித் தேவைகளையும் நீணடகாலக் கனவுகளையும் நடைமுறையாக்க நாம் உரிய உபாயங்களை முன்னெடுப்போம். அந்த வகையில்,

• நாம் தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து மக்களை அணி திரட்டிப் போராடுவோம்.

• தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்டுவோம்;

• தமிழர்களின் அபிலாஷைகளை நிலைநாட்டுவதற்கு தமிழக மக்களின் உண்மையான ஆதரவையும் இந்திய அரசின் சரியான அனுசரணையையும்  மீண்டும் உறுதிப்படுத்துவோம்;

• தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவோம்.

• யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் வாழ்வாதாரங்கள் மறு நிர்மாணம் செய்யப்படவும், வீடுகள், வீதிகள், பாடசாலைகள, ஆஸ்பத்திரிகள், ஆலயங்கள், நீர்ப்பாசனக் குளங்கள் துறைமுகங்கள் என அனைத்தும் செப்பனிடப்படவும் வேண்டி அரசை உரிமையோடு வலியுறுத்துவோம்.

• எமது தேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் மீண்டும் நவீன நுட்பங்களோடு உயிரோட்டம் பெறவும், பல்வகைப்பட்ட தொழிற் துறைகள் மற்றும் வர்த்தகத் தறைகள் செழிப்படையவும் அத்துடன் எமது கடற்கரைகள் எங்கும் சுற்றுலாத்துறை விரிவுகொள்ளவும் ஆவன செய்வோம்.

• சிறப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ள அப்பாவி இளைஞர்களை விடுவிக்க நாம் வேண்டிய கோரிக்கைகளை முன்னெடுப்போம்.

வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 20 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்: பெருந்தொகை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் இராணுவ பாதுகாப்பு வலயங்களாக இன்னமும் உள்ளன. அவை உடனடியாக நீக்கப்படவும் அகதிகளான மக்கள் மீண்டும்; குடியேறவும் வேண்டியன செய்வோம்.

• தமிழர் பிரதேசங்களின் முன்னேற்றங்களுக்காகவும் தமிழர்களின் வாழ்வில் செழிப்பு எழுச்சி பெறவும் மேலைத்தேச நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான எமது சகோதரர்களின் வளங்கள் வந்தடைய வழிகள் செய்வோம்.

• இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமது மக்களையும் பிரதேசங்களையும் தவறாது வந்தடைய அனைத்தும் செய்வோம்.

• இலங்கை மக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமைகளை தவறாது  அங்கீகரிப்போம். ஆனால் தமிழர் தேசத்தில் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கான முயற்சிகளை அங்கீகரிக்க மாட்டோம்.

• தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து ஒரே மாநிலமாக நிமிர்ந்து நிற்க அனைத்து சக்திகளினதும் ஆதரவை அணிதிரட்டுவோம்;.

• இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பகிர்வு திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பும், ஒத்தாசையும் வழங்க முடியும். அவற்றினை பெறுவதற்கு நாம் ஆவன செய்வோம்.

• தமிழர்கள் மத்தியில் இன்னமும் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்கப் போராடுவோம்: சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

• தமிழர்கள் மத்தியில் உண்மையான ஒற்றுமை உருவாகுவதற்க உரிய முயற்சிகள் அனைத்தையும் மக்களின் ஆதரவோடு நேர்மையாக மேற்கொள்வோம்.

• இலங்கையின் அனைத்து முற்போக்கு ஜனநாயக சமூக சக்திகளின் மத்தியில் புதிய ஐக்கிய முன்னணியொன்று எழுச்சி பெற அனைத்தும் செய்வாம்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்;

 எனவே, இவ்வாறான எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை எமது கட்சியின் தேர்தற் சின்னமான மெழுகுதிரிக்கு நேரே அளித்து அவர்களை நீங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் வாழ்வில் விடிவுகள் பிறக்க

மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு உங்கள் வாக்குகள்



  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’