வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010

ஐபிஎல் என்பது லாப நோக்கு மட்டுமே: பி.டி.உஷா

ஐ.பி.எல். அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளனர். இதனால் ஏனைய விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது தடகளத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என 'தங்க மங்கை' பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் என்பது விளையாட்டல்ல, வெறும் வியாபாரம். இதனால் கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும் என முன்னாள் நீச்சல் சம்பியன் வில்சன் செரியன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஐபிஎல் அமைப்புக்கு அதிரடியாக 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
ஐபிஎல் இன் தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணிகளின் இவ் வருட நிறுவன மதிப்பீட்டு
சென்ன சூப்பர் கிங்ஸ் அணி, பட்டியலில் ரூ. 220 கோடி ரூபாயுடன் முதலிடம் பெற்றுள்ளது.
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 210 கோடி இரண்டாவது இடம்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ரூ. 205 கோடி மூன்றாவது இடம்.
அடுத்த இடங்களில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் ரூ. 190 கோடி 4ஆவது இடம்.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் ரூ. 185 கோடி 5ஆவது இடம்
டில்லி டேர்டெவில்ஸ் ரூ. 184 கோடி அணி 6 ஆவது இடம்
நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 164 கோடி 7ஆவது இடம் டெக்கான் சார்ஜர்ஸ் ரூ. 156 கோடி 8 ஆவது இடம்.
இவற்றை விடவும் சமீபத்திய ஏலத்தில் கொச்சி ரூ. 1,533 கோடி, புனே ரூ. 1,702 கோடி ஆகிய இரண்டு புதிய அணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’