த “ர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ...தர்மம் மறுபடியும் வெல்லும்.”
1986 மார்கழி 13 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளில் துயர் தோய்ந்த ஒருநாள். விடுதலை இயக்கங்களை அழித்தொழித்து தனது ஏக அதிகாராத்தை நிலை நிறுத்தும் ஆசையில் பிரபாகரன் தனது ஆயுததாரிகளை ஈபிஆர்எல்எவ் மீது ஏவி விட்ட நாள்.
தமிழ் மக்களின் விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு ஆயுதந்தாங்கிய புலிகள் இயக்க இளைஞர்கள் பிரபாகரனதும் அவருக்கு அருகிலிருந்து ஆலோசனை வழங்கியவர்களதும் சூழ்ச்சிக்கு பலியாகி ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் மேற்கொண்டனர். ஏன் எதற்கு என்று அறியாமல் தலைமையின் கட்டளை என்ற பேரில் ஈபிஆர்எல்எவ் ஐ சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். புல ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தமது இளமைக்கால ஆசைகளை தூக்கிஎறிந்து அர்ப்பண உணர்வோடு தமிழ் மக்களின் விடிவி;ற்காக போராட முன்வந்த இளைஞர்கள் எவ்வித காரணமுமின்றி கொல்லப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை பாதுகாத்து வீடுகளில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர்களை தமது முகாம்களில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறும் கிராமங்கள் தோறும் வீதிகளை வலம் வந்த புலிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. ஆனாலும் புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி தோழர்கள் பலர் மக்களாலும் உறவினர்களாலும் பாதுகாக்கப்பட்டனர். பல இடங்களில் கிராம மக்கள் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை கைது செய்ய வந்த புலிகளை பகிரங்கமாக எதிர்த்து நின்று பாதுகாத்தனர். புலிகளின் அராஜகத்தின் முன்னால் தோற்றுப்போய்விட்டாலும் முதல் தடவையாக மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று வீதியை மறித்து ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலை தடுக்க முனைந்தனர். இவை அனைத்துக்கும் மத்தியில் ஒரு கூட்டம் தமது சொந்த நலன்களை நோக்கமாக கொண்டு புலிகளின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாயிருந்ததையும் மறந்துவிட முடிhயது. எது எப்படியிருந்தபோதும் வீரத்திலும் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் உயர்ந்த தமிழ் சமூகம் புலிகளின் துப்பாக்கிகளால் மௌனமாக்கப்பட்டிருந்தது. புலிகள் ஈபிஆர்எல்எவ் ஐ அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடக்கம் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா தோழர் கிருபா தோழர் ஜேர்ச் தோழர் கபூர் தோழர் கதிர் தோழர் பெஞ்சமின் தோழர் றொபேட் போன்ற தலைமைத் தோழர்கள் உட்பட ஈபிஆர்எல்எவ் இன் பல நூற்றுக்கணகாகான தோழர்களை பிரபாகரனின் படைகள் கொன்றொழித்திருந்தன. துரோகிகள் துணைப்படைகள் அரசாங்கத்தின் எடுபிடிகள் என சரமாரியான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டும் மக்கள் மனங்களிலிருந்து எம்மை துடைத்தழித்துவிட முடியவில்லை. அதேவேளை முள்ளிவாய்;க்காலில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு இந்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே துரோகிகள் - துணைப்படைகள் - அரசாங்கத்தின் எடுபிடிகள் -காட்டிக்கொடுப்பவர்கள் - மோசடிப்பேர்வழிகள் என தங்களுக்குள் மோதிக்கொள்வதை காண்கிறோம். தமது சொந்த நலன்களை பாதுகாத்துக்கொள்ள ஈபிஆர்எல்எவ் ஐ சேர்ந்த ஒரு சிலர் புலிகளிடம் சோரம் போய் ஈபிஆர்எல்எவ் ஐ உருக்குலைக்க முனைந்தபோதும் ஈபிஆர்எல்எவ் இன் கொள்கை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும் மக்களின் நலன் சார்ந்த தோழர் பத்மநாபாவின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உள்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்றும் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். ஆதரவு நல்கி வருகினறனர். தமி;ழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்த சட்டவலுவுள்ள ஒரே தீர்வு ஈபிஆர்எல்எவ் இன் காத்திரம் மிக்க பிரதான பங்களிப்போடும் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் தியாகத்திற்கு மத்தியிலும் கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணசபை மாத்திரம் தான் என்பதையும் இங்கே குறித்துக்கொள்ளுதல் பொருந்தும். ஏகபிரதிநிதித்துவ கனவில் ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க நினைத்த புலிகள் இந்த 25 வருடங்களுக்குள்ளாகவே தம்மையும் அழித்து தமிழ் மக்களின் 50 வருட போராட்டத்தையும் விழலுக்pறைத்த நீராக்கி தமிழ் மக்களை நிர்க்கதியான நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். உயிரிழப்புக்களும் உடல் ஊனமும் பாரிய சொத்து அழிவும் அதன் விளைவுகளுமே மக்களை ஆட்டிப்படைக்கும் நிலையையே காண்கின்றோம். தமிழ் மக்களின் போராட்டம் புலிகளால் முட்டு;ச் சந்தில் கொண்டுவந்து விடப்பட்டபோதும் எல்லாரும் சுட்டவை எல்லாரும் பிழை விட்டவை என பொதுமைப்படுத்தி இழிவுபடுத்தும் கபடத்தனம் மேற்கிளம்பியுள்ளதை பார்க்கின்றோம். மக்களின் உரிமைக்கும் ஜனநாயக மீட்சிக்குமான எமது போராட்டத்தில் கடந்த 30 வருட வரலாற்றில் நாம் பல்வேறு சந்தர்ப்பஙகளில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். அவதூறுகளை கேட்டிருக்கிறோம். அதே வேளை எமது கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் செழுமை சேர்க்கும ஆக்கப{ர்வமான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் செவிமடுத்திருக்கின்றோம். வரலாறு எம்மை விடுதலை செய்யும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான எமது பயணத்தை தொடர்வோம்.. தோழர் .மோகன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’