ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) இன் தேர்தல் பிரச்சாரம்
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் தி. ஸ்ரீதரன் தலமையில் ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) இனர் தமது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல மக்கள் ஆர்வமாக கலந்து வருகின்றனர். இடதுசாரி அமைப்புக்களை சேர்நதவர்கள் பலர் இவர்களுடன் இணைந்து வேலைசெய்து வருகின்றனர்.
கிராமப் புற மக்கள் மட்டும் அல்ல நகரப்புற மக்களும் ஆர்வமாக இவர்களின் தேர்தல் பரப்புரையை கேட்டு வருகின்றனர். மீண்டும் 80 களில் ஈபிஆர்எல்எவ் இற்கு இருந்ததைப் போன்றதொரு ஆதரவு அலை வீச ஆரம்பிப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன. யாழ் மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன் (சிவராஜ சிவமோகன்) தேர்தல் பரப்புரையை நெறிப்படுத்தி வருகின்றார். இதேவேளை வன்னியில் தோழர் கிருபா தலமையில் புளொட் அமைப்புடன் இணைந்து மீள்குடியெற்றப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) இனர் சென்று தமது தேர்தல் பரப்புரைகளை செய்து வருகின்றனர். திருகோணமலையில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை முதல்வர் வரதராஜப்பெருமாளை தாம் எதிர்பார்த்து இருப்பதாக மக்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் தோழர் சிவம் தலைமையில் ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) இனரிடம் ஆவலாக கேட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் புளொட்டின் வெற்றியிற்காக ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான சகல ஒருங்கிணைப்புக்களையும் இரா. துரைரத்தினம் மேற்கொண்டு வருகின்றார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’