அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வின் ‘நாசா’ தொடர்பான புதிய கொள்கையால் அரசியல் முக்கியத் துவம் வாய்ந்த புளோரிடாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இதனால் வேலையிழப்பு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சமும்
விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பெப்ரவரி 1 ஆம் திகதி சமர்ப்பித்த பட்ஜெட்டில் 2011 ஆம் ஆண்டிற்காக ‘நாசா’விற்கு மொத்தம் 91 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் வரும் 2020 ஆம் ஆண்டு நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மாறாக வர்த்தக ரீதியிலான விண்வெளி ஓடம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு 28 ஆயிரத்து 800 கோடி ரூபா என ஐந்தாண்டுகளுக்கு செலவிட திட்டமிடப்பட்டது.இது குறித்து புளோரிடாவைச் சேர்ந்த ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த வாரம் அதிபர் ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் “விண்வெளியில் நமது சாதனைகளை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் விண்வெளியில் நமது சாதனைகளுக்கு தற்போது சவால் விடும் மற்ற நாடுகள் நம்மை வென்றுவிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறையை தவிர்க்க அதிபர் ஒபாமா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கையால் தங்களுக்கு வேலையிழப்பு ஏற்படுமோ என புளோரிடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத் திறமையாளர்கள் அஞ்சுகின்றனர். ஏனென்றால், “நாசா”வில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் புளோரிடாவைச் சேர்ந்தவர்கள். மேலும் ஜனாதிபதி தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாகாணம் புளோரிடா. இங்கு தற்போது ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’