வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜெனீவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெனீவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க



க்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 13 மார்ச், 2012

ஜெனீவாவில் ரஜீவவை களமிறக்குகிறது அரசு


ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா நோக்கிப் பயணிக்க உள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

திங்கள், 5 மார்ச், 2012

சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி


பொறுப்புக் கூறுதல் தொடர்பாக அமெரிக்கா உட்பட உலக சக்திகள் பலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் விரைவில் சட்டமாக்கப்படும் என சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சனி, 3 மார்ச், 2012

அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்படும்'


ரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனது அறிக்கையை 6 மாதங்களில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று ஜெனீவாவில் தெரிவித்தார்.

வெள்ளி, 2 மார்ச், 2012

இலங்கைக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும்: சீனா, பாகிஸ்தான் வலியுறுத்தல்


வெளிச்சக்திகளால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படாமல் நல்லிணக்க செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கப்பட வேண்டுமென சீனாவும் பாகிஸ்தானும் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வலியுறுத்தியுள்ளன.

இலங்கைக்கான காலம் கடந்துகொண்டிருக்கிறது: அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலர்


ல்லிணக்க விடயத்தில் இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என சர்வதேச சமூகம் மூன்று வருடங்களாக காத்திருந்துள்ளது. அவர்களுக்கான காலம் கடந்துகொண்டிருக்கிறது என அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் மரியா ஒட்டேறோ கூறியுள்ளார்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

நிபுணர் குழுவுக்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலி யில் வாழும் சிங்கள மக்கள் நேற்று ஜெனீ வாவில் உள்ள ஐ.நா. தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.

புதன், 14 ஜூலை, 2010

ஐ.நா.நியமித்த குழுவுக்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை நியமித்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சுவிஸ் வங்கிகளின் ரகசியம்: பேணிக்காக்க மக்கள் ஆதரவு




ஜெனீவா : "சுவிஸ் வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிடக் கூடாது. நீண்ட காலமாக பேணிக்காக்கப்பட்டு வரும் இந்த ரகசியத்தை, வங்கிகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்' என, அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த கறுப்புப் பணத்தை கோடிக்கணக்கில் டிபாசிட் செய்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இப்படி பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிபாசிட் செய்துள்ளதாகவும், இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும், பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதேபோல், அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் உட்பட வேறு பல நாடுகளும், சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றன. இதனால், சுவிஸ் அரசு, சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டவர்களின் கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடலாமா அல்லது முன்னர் போலவே ரகசியமாக வைக்க வேண்டுமா என்பது குறித்து, கருத்து கணிப்பு ஒன்று அந்நாட்டு மக்களிடம் நடத்தப்பட்டது. இதில், வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிட பெரும்பாலானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
"வங்கிக் கணக்குகளின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தப் பாரம்பரியம் தொடர வேண்டும்' என, 15 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்களில் 68 சதவீதம் பேரும், மற்றவர்களில் 62 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இத்தகவல், "மேடின் திமாஞ்சி' என்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கி என்றாலே ரகசியம் காக்கும் வங்கி என்ற நிலை, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது.
தற்போது அமெரிக்காவும், ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளும் தங்கள் பணம் ரகசியமாக, அதுவும் குறிப்பாக வரி கட்டாதவர்கள் சேமிக்கும் சேமிப்பை ஊக்குவிக்கும் இந்த நடைமுறையை எப்படியும் உடைத் தெறிய சட்ட நடைமுறைகள் கொண்டுவர முயல்கின்றன. இந்த சமயத்தில் இக்கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.