வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஜூலை, 2010

நிபுணர் குழுவுக்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலி யில் வாழும் சிங்கள மக்கள் நேற்று ஜெனீ வாவில் உள்ள ஐ.நா. தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.
இத்தாலி வாழ் இலங்கையர்கள் ஒன்றியம் என்கிற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய ஐக் கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபு ணர் குழு வாபஸ் பெறப்பட வேண்டும், இலங் கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் இத்தாலி நாட்டின் ரோம் மற்றும் மிலானோ ஆகிய நகரங்களிலி ருந்து சுவிட்சர்லாந்து வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’