இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை நியமித்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் இறைமையைப் பாதுகாப்பதற்கான அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள் அடங்கிய பல அமைப்புகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்,மேற்படி ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்னஞ்சல் மூலம் சிலர் இதனைக் குழப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டதாக அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’