வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஜூலை, 2010

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நிரந்தர படைமுகாம்கள் நிர்மாணிப்பு வேலைகள் புலிகளின் ஊடுருவலைத்தடுப்பது அவசியம்; கோதாபய ராஜபக்ஷ

ஆரம்ப காலங்களில் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று இலங்கைக்குள் வந்தது போன்ற ஊடுருவல்கள் மீண்டும் ஏற்படாதவாறு தடுக்கப்படவேண்டுமென தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிரந்தர படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வன்னியிலுள்ள 61 ஆவது படையணித் தலைமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் படையினர்முன்னிலையில் உரையாற்றும்போதே கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"விடுதலைப்புலிகளுக்கு எதிராக நாம் பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் போராடிப் பெற்ற வெற்றியை நீண்ட காலத்துக்கு உறுதி செய்துகொள்ள வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்காகவும் முப்படையினரும் பொலிஸாரும் இந்த கடமையை நிறைவேற்ற வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போராடி அவர்களைத் தோற்கடித்த காலகட்டம் முடிந்து புதிய காலகட்டத்திற்குள் நாம் பிரவேசித்துள்ளோம்.இந்த இரு நிலைமைகளிலும் நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்வண்ணமே எடுத்துச்செல்லவேண்டும். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நடவடிக்கையின் போது இருந்ததைவிட புதிய முறையில் நாம் எமது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.அது நீண்டகாலத்துக்கு பாதுகாப்பைஉறுதி செய்வதாக இருக்கவேண்டியது அவசியம்.
இதேநேரம், வரலாறு என்பது எப்போதும் முக்கியமானது. பயங்கரவாதம் எப்படி ஆரம்ப காலகட்டத்திலிருந்து வளர்ச்சி பெற்று இராணுவத்துடன் சமமாக நின்று யுத்தம் செய்யக்கூடிய அளவு வரை வளர்ந்தது என்பதை ஒவ்வொரு படையினரும் அறிந்து, புரிந்து கொள்ளவேண்டும்.அப்போதுதான் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாவதை தடுக்கமுடியும்.படைகளைத் தயார் செய்து கொள்ளவும் முடியும். இதற்கு புலனாய்வுத்துறை பலப்படுத்தப்படவேண்டியது அவசியம்.
வன்னிப் பிரதேசம் என்பது பாரிய காடுகளைக்கொண்ட கஷ்டமானதொரு நிலப்பிரதேசம்.இதை நாம் நிர்வகித்துக் கொள்வது அவசியம்.ஏனெனில் இங்கு தான் புலிகள் பயிற்சி முகாம்களை அமைத்திருந்தனர்.அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் இடமளித்துவிடக்கூடாது.
விடுதலைப்புலிகளுக்கு வெளியில் இருந்தே கடல் மார்க்கமாக ஆயுதங்கள வந்தன.இதில் எவையும் இங்கு தயாரிக்கப்படவில்லை. இவ்வாறான ஆயுதங்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்கவேண்டும்.அது மட்டுமல்லாது புலிகளின் பயிற்சி முகாம்கள் இருந்ததும் வெளியில்தான்.அங்கு பயிற்சிகளை பெற்றே இலங்கைக்குள் வந்தனர்.

எனவே, இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டியது அவசியம்.

வன்னிப் பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நிரந்தர படைமுகாம்கள் ஏற்படுத்தப்படவேண்டும். முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் நிரந்தர முகாம்களை அமைத்துச் செல்கிறோம். 30 வருடங்கள் அர்ப்பணிப்புடன் செய்து பெற்ற வெற்றியை உறுதிசெய்து மீண்டும் பயங்கரவாதம் ஏற்டாத வகையில்செயற்படவேண்டும்.
அதேபோல், மக்களுடன் சுமுகமான உறவை பேணவேண்டியதும் பாதுகாப்பு படையினரின் முக்கிய கடமையாகும்.பொதுமக்களின் மனங்களை வென்று அவர்கள் மீண்டும் பயங்கரவாதத்துக்குள் சென்று விடாத வகையில் தடுத்துக்கொள்ளவேண்டும்.
கடந்த 4 வருடங்களில் படையினரின் எண்ணிக்கை 3 மடங்கினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் தொழில்சார் ரீதியாக உயர்நிலையில் இருக்கவேண்டும்.
அதேபோல், பாதுகாப்புப் படையினரின் ஒழுக்கமும் முக்கியம்.படை நடவடிக்கைகளின்போது பாரிய படையொன்றை நிர்வகிப்பது இலகு. ஆனால் சமாதான காலத்தில் அது கடினம்.எனவே, ஒழுக்கம் என்பது முக்கியம். கடந்த காலங்களில் சிறிய சம்பவங்களும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
பொது மக்களுடனான தொடர்புகளின் போது ஒழுக்கம் மிகவும் அவசியம்.பெரும் எண்ணிக்கையைக் கொண்ட படையொன்றில் சிலர் ஒழுக்கமின்றிச் செயற்படலாம்.அவ்வாறானவர்களை திருத்த வேண்டியது ஏனையவர்களின் பொறுப்பு.
இதேநேரம், முப்படைகளையும் சேர்ந்த சகல மட்டத்திலானோரும் தாம் எந்தச் சட்டத்தின் கீழ் வழிநடத்தப்படுகிறோம் என்று தெரிந்து வைத்திருக்கவேண்டும்.சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றிய அறிவையும் அவர்கள் கொண்டிருக்கவேண்டும்%27 என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’