வெளிச்சக்திகளால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படாமல் நல்லிணக்க செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கப்பட வேண்டுமென சீனாவும் பாகிஸ்தானும் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வலியுறுத்தியுள்ளன.
தேசிய நல்லிணகக் செயன்முறையை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை தனது அரசாங்கம் பாராட்டுவதாக சீன தூதுவர் லியூ ஹென்மின் கூறினார். இலங்கையின் இணக்கப்பாட்டுடனேயே சர்வதேச உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். உண்மையான நல்லிணக்க பொறிமுறையை உள்நாட்டில் செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு நேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. தென்னாபிரிக்கா, தாய்லாந்து, பொட்ஸ்வானா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இலங்கையின் நல்லிணக்க செயன்முறை குறித்து இலங்கைக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’