ந ல்லிணக்க விடயத்தில் இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என சர்வதேச சமூகம் மூன்று வருடங்களாக காத்திருந்துள்ளது. அவர்களுக்கான காலம் கடந்துகொண்டிருக்கிறது என அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் மரியா ஒட்டேறோ கூறியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 'நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு இல்லாமல் நிலையான சமாதானம் இல்லையனெ;பதை அனுபவத்தால் அறிந்துள்ளோம். ஆனால் இலங்கைக்கு காலம் கடந்து வருகின்றது என்பதையிட்டு நாம் கவலையடைகின்றோம். இலங்கையின் நடவடிக்கையை எதிர்பார்த்து சர்வதேச சமுதாயம் 3 வருடங்களாக காத்திருந்தது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியானதை நாம் வரவேற்கின்றோம். இந்த அறிக்கையின் சிபாரிசுகள் அமுலாக்கப்பட வேண்டும். 2009 ஆம் ஆண்டில் போர் முடிந்ததிலிருந்து இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் நாம் சில இருதரப்பு முயற்சிகளில் ஈடுபட்டோம். அவர்களுடன் வேலைசெய்ய எப்போதும் தயாராகவுள்ளேர். இலங்கையில் நிலையான சமாதானத்துக்கான விதையை இந்த கவுன்ஸிலின் செயற்பாடு தூவும்' என ஒட்டேறோ கூறினார். "இணையம் தொடர்பான உரிமைகள், சுதந்திரங்களை சில நாடுகள் நசுக்க முயன்றுவருவதாகல் கருத்து வெளிப்படுத்தலுக்கான வழமையான வழிகளாக உள்ள இணையம் மற்றும் நடமாடும் தொழில்நுட்பங்கள் தொடர்பிலும் சர்வதேச அளவிலான கருத்துச் சுதந்திரம் கூட்டம் கூடும் உரிமை என்னும் கருத்துக்கள் பொருந்தும் என அமெரிக்கா மீண்டும் மீண்டும் கூறுகிறது. சில நாடுகள் கருத்துப் பரிமாறலையும் அரசியலில் மாற்றுக்கருத்துக்களையும் நசுக்குவதற்குபுதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்களின் பின்புலத்தில் மனித உரிமைகள் தொடர்பிலான தத்தம் கடப்பாடுகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என நாம் விரும்புகிறோம். இந்த மனித உரிமைகள் பேரவை, மனித உரிமை விடயங்களில் அக்கறை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சவால்கள் இருக்கவே செய்கின்றன. நிரந்தர நிகழ்ச்சி நிரலில் உள்ள ஒரு விடயத்தில ஒரு நாட்டை மாத்திரம் நீதியீனமாக தனிமைப்படுத்தியிருப்பதை மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுச் செயற்பாடு கருத்திற்கொள்ளவில்லை என்பதையிட்டு அமெரிக்கா கவலை கொள்கிறது. விடயம் 7 ஐ இல்லாதொழித்து, சகல நாடுகளையும் பொது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டுவரும்போது இந்த பேரவையின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். மனித உரிமைகள் சர்வதேச ரீதியான பொருத்தப்பாடு உடையவை. எனது நாடான அமெரிக்கா உட்பட சகல அரசாங்கங்களும் தனியான மனித உரிமையை மதிக்க வேண்டும். உரிமைகளை பிரயோகிக்கும் தனியாளின் ஆற்றல் பாதுகாக்கப்பட வேண்டும். வெளிப்படையான, பொறுப்புக்கூற வேண்டிய ஆட்சி முறைக்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த அமர்வில் நாம் பங்குபற்றும் வேளையில்,மனித உரிமைகள் பேரவையில் இரண்டாவது தவணையாகவும் இருப்பதற்கு எதிர்பார்க்கும் தருணத்தில் அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்தும் பாடுபடும். இந்த பேரவை இவ்வுலகத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துமென நம்புகிறோம். இந்த பேரவையில் முன்னேற்றகரமான செயற்பாட்டில் பங்கெடுக்க நாம் ஆர்வமாக உள்ளோம்" எனவும் அவர்கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’