வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கட்டுநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஜூன், 2012

பெனினிலிருந்து 148 இலங்கையர்கள் நாடுகடத்தல்

ஆபிரிக்க நாடான பெனினிலிருந்து நாடு கடத்தப்பட்ட 148 இலங்கையர்கள் இன்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வியாழன், 12 ஜனவரி, 2012

மலவாசலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்த முயற்சித்த சந்தேகநபர் கைது


ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மலவாசலில் மறைத்துக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திங்கள், 9 ஜனவரி, 2012


உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான 'எயார் பஸ் ஏ - 380', ரக விமானமொன்று இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சுமார் 40 நிமிடங்கள் தரிந்து நின்றது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் எரிபொருள் நிரப்பிக்கொள்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.20 மணியளவில் தரையிறக்கப்பட்ட மேற்படி விமானம், மீண்டும் 5.40 மணியவில் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

மலவாயிலில் மறைக்கப்பட்டிருந்த ரூ. 50 இலட்சம் பணத்துடன் சந்தேகநபர் கைது


50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மலவாயிலில் வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வியாழன், 13 ஜனவரி, 2011

இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற பெண் கைது! _

தங்கக்கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக எமது விமான செய்தியாளர் தெரிவித்தார்.

புதன், 10 நவம்பர், 2010

கட்டுநாயக்கா பொருளாதார வலய தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

கட்டுநாயக்கா பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள சினோ ரெக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது

புதன், 20 அக்டோபர், 2010

போலி கடவுச்சீட்டுக்களை இனங்காண கட்டுநாயக்காவில் புதிய உபகரணம்

கட்டுநாயக்காவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுகளை இனங்காண்பதற்கான புதிய உபகரணமொன்று இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பொருத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

போலிப் பயண முகவர் நிறுவனம் முறியடிப்பு

போலியான பயண முகவர் நிலையமொன்றை முறியடித்த பொலிஸார், தன்னை பொலிஸ் அதிகாரி எனக் காட்டிக் கொண்ட ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இந்திய நபர் விமான நிலையத்தில் கைது

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரர் தற்கொலை

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் படை வீரர் ஒருவர் இன்று காலை 7 மணியளவில் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருக்கும் விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

திங்கள், 19 அக்டோபர், 2009

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள் கைது

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அன்றைய நாள் இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவ்விளைஞர்களை இலங்கைக் காவல்துறையினருடன் இயங்கும் புலனாய்வுப் பிரிவினரிடம் கைதுசெய்துள்ளனர்.

அதேபோன்று, கடந்த 16ஆம் திகதி இலங்கையிலிருந்து பிரித்தானியா செல்ல முயன்ற தமிழ் மாணவர்கள் 18 பேர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் புலனாய்வுப் பிரிவைனரால் கைதுசெய்யப்பட்டனர்.

பிரித்தானியா மாணவர் விசாபெற்று இவர்கள் அங்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே கைதாகி விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழ் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஏராளமான புலனாய்வுப் பிரிவினரும், துணை இராணுவக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.