வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஜனவரி, 2012


லகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான 'எயார் பஸ் ஏ - 380', ரக விமானமொன்று இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சுமார் 40 நிமிடங்கள் தரிந்து நின்றது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் எரிபொருள் நிரப்பிக்கொள்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.20 மணியளவில் தரையிறக்கப்பட்ட மேற்படி விமானம், மீண்டும் 5.40 மணியவில் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏ – 380 ரக மேற்படி விமானத்தில் சுமார் 780 பயணிகள் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இவ்வாறானதொரு விமானத்தை தரையிறக்கக்கூடிய போதிய வசதிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இல்லாத போதிலும் அவ்விமானத்தின் தேவை கருதி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர். அம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டாவது சர்வதேச விமான நிலையமானது, மேற்படி ஏ -380 ரக விமானங்கள் தரையிறக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’