வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஜனவரி, 2012

இலங்கையரை பயங்கரவாதி எனக்கூறிய நபர் மன்னிப்பு கோரினார்


பிரிட்டனிலுள்ள கடையொன்றில் பணியாற்றிய இலங்கை மற்றும் இந்திய ஊழியர்களை பயங்கரவாதிகள் எனக் கூறிய ஒருவர் நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.
45 வயதான ஸ்டுவர்ட் ஜோன்ஸன் எனும் நபர் முன்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர். இனவாத ரீதியாக தொந்தரவு செய்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. கேம்பிரிட்ஜை சேர்ந்த இந்நபர் டிசெம்பர் 22 ஆம் திகதி மதுபோதையுடன் கடையொன்றுக்குள் சென்று அங்கிருந்த ஊழியர்களை பயங்கரவாதிகள் எனக்கூறியதாக வழக்குரைஞர் லோரா மார்டெல் கூறினார். "பிற்பகல் 3.30 மணிக்கு கடைக்குள் சனெ;ற சந்தேக நபர், கடை ஊழியர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் எனக் கேட்டார். அவர்களில் ஒருவர் தான் இலங்கையிலிருந்து வந்தர் எனக் கூறியபோது, அவரை தமிழ் புலி என ஜோன்ஸன் கூறியுள்ளார். அந்நபர் பேசிய விதத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாம் பயங்கரவாதி என அழைக்கப்பட்டதாக அவர்கள் உணர்ந்தனர்" என வழக்குரைஞர் கூறினார். சந்தேக நபர் கைது செய்வதற்கு வந்த பொலிஸார் இருவரை அவர் உதைத்தாகவும் வழக்குரைஞர் மார்டெல் கூறினார். சந்தேக நபரான ஜோன்ஸன், தன்மீதான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஒப்புக்கொண்டதுடன் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவரின் வழக்குரைஞர் தெரிவித்தார். ஜோன்ஸனுக்கான தண்டனை ஜனவரி 27 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’