போலியான பயண முகவர் நிலையமொன்றை முறியடித்த பொலிஸார், தன்னை பொலிஸ் அதிகாரி எனக் காட்டிக் கொண்ட ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
குறித்த சந்தேக நபர்கள் வெளிநாடு அனுப்புவதாக கூறி நாடு முழுவதிலிருந்தும் பலரிடம் பணம் வசூலித்துள்ளனர்.
சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒன்பது பேரை தவிக்க விட்டுச் சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகளின் மூலம் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸுக்கு ஒன்பது முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் கலனேவ பகுதியில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’