வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தியாகராஜா மகேஸ்வரனின் துணைவியார் விஜயகலா மகேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகராஜா மகேஸ்வரனின் துணைவியார் விஜயகலா மகேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 டிசம்பர், 2010

மழை வெள்ளத்தினால் மீள்குடியேறிய மக்கள் வன்னிப் பகுதியில் பெரும் அவலம்: விஜயகலா மகேஸ்வரன்

யுத்தத்தின் கொடுமையினால் விதவைகளாக்கப்பட்டவர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது பெய்து வரும் அடைமழையினால் வடக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்கள் வெள்ளம் காரணமாக பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகின்றது. எனவே சுகாதார அமைச்சு இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்

செவ்வாய், 16 நவம்பர், 2010

காணாமல் போனோரைக் கண்டறியவும் முகாம்களில் உள்ளோரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணாமல் போன தமது உறவுகளையும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளையும் மீட்டுத் தருமாறும் தமது அடிப்படை வசதிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி, கண்டாவளை, முரசுமோட்டை பகுதிகளில் மீள் குடியேறியுள்ள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 1 ஜூலை, 2010

மாற்றாந்தாய் மனப்பாங்கில் வரவு-செலவு திட்டத்தில் தமிழர்களுக்கு நிதி ஒதுக்கீடு

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் தமிழ் மக்களின் நல வாழ்வுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

சனி, 12 ஜூன், 2010

சட்டவிரோத ஆயுதக் குழுக்களிடம் உள்ள ஆயுதங்களை களைய வேண்டும்-விஜயகலா

சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடம் இருக்கும் சகல ஆயுதங்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ களைய வேண்டும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வியாழன், 6 மே, 2010

மகேஸ்வரனின் படுகொலை விசாரணை முடிவு ; விஜயகலா எம்.பி வேண்டுகோள்


முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.இவ்வாறு யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐ.தே.கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது


ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தோ்தலிற்கான நியமனப்பத்திரத்தை யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. இப்பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் துணைவியார் விஜயகலா மகேஸ்வரன் முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தியாகராஜா துவாரகேஸ்வரன், நடராஜா சண்முகவேல், சாம்பசிவம் சத்தியேந்திரா, ராஜரட்ணம் ஸ்ரீதாமோதரராஜா, சண்முகசுந்தரம் லவக்குமார், சின்னத்துரை குலேந்திரராஜா, பெற்றாசிங்கம் அந்தனி ஜூட் ராஜசிங்கம், வல்லி மகேந்திரன், சந்திரலிங்கம் ஸ்ரீகஜன், முகமட் அப்துல் காதிர் முகமட் முபீன், மமுனா லெப்பை கஜீத் அமீர், ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என அறியவந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்திற்காக இதுவரையில் 7 அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.