முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.இவ்வாறு யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் தன்னுடைய கன்னி உரையை நேற்று நன்பகல் யாழ் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்தினார்.குற்றவாளி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான பின்னணித்தகவல்கள் வெளிக்கொணரப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சரான தி.மகேஸ்வரன் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி படுகொலைசெய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’