வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 மே, 2010

ஒசாமா பின் லேடன் குடும்பத்துடன் ஈரானில் வாசம் _

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் ஈரானில் தங்கியிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிபயங்கர தீவிரவாதியாகக் கருதப்படும் பின் லேடன் ஒரு சர்வதேச குற்றவாளி. இவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக ஒருமுறை தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாகவும். ஆனாலும் அவர் உயிருடன் இல்லை என்றும் நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரை வேட்டையாடும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் அவர் ஈரானில் தங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு ஈரான் புரட்சிப் பாதுகாப்பு படையினர் காவலாக உள்ளனர். அவர் குகைகளிலோ அல்லது மறைவிடத்திலோ ஒளிந்து வாழவில்லை. பகிரங்கமாக மக்களுடன் வாழ்வதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் பிரபல இயக்குனர் ஆலன் பாரட் என்பவரின் டாக்குமென்டரி சினிமா படம் மூலம் தெரிய வந்துள்ளது. இப்படத்தை எடுக்க கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து இயக்குனர் பாரட், 6 தடவை ஈரானில் பின்லேடனை நேரில் சந்தித்திருப்பதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’