2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் தமிழ் மக்களின் நல வாழ்வுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களை அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்துகின்றதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இம்முறை வரவு செலவுத் திட்டமானது, தமிழ் மக்களை ஏமாற்றும் திட்டமாகவே அமைந்துள்ளது என்றும் விஜயகலா எம்.பி. இதன்போது சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு செலவுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் துன்பப்படும் மக்களுக்கும், மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மக்களுக்கும் உரிய வசதிகளை செய்து கொடுப்பதற்கு போதுமான நிதி இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படாதது கவலை அளிக்கும் விடயமாகும்.
இது தமிழ் மக்களை அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்துகின்றதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’