வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தாய்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 மே, 2012

தாய்லாந்துக்கு இளவரசியுடன் ஜனாதிபதி மஹிந்த



தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு இளவரசி மஹா சக்ரி ஸ்ரீந்தோர்னை சந்தித்து பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதன், 30 மே, 2012

குற்றச்செயல்கள் குறித்து பரஸ்பர ஒத்துழைப்பு: இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் ஒப்பந்தம்



குற்றச்செயல்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான புரிந்துணர்வு எனும் அடிப்படையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இரு ஒப்பந்தங்கள் இன்று

வியாழன், 12 ஏப்ரல், 2012

போதைப்பொருள் வைத்திருந்த தாய்லாந்து பெண்கள் கைது



கொ
கேயின் போதைப் பொருளை இரு கம்பிகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கட்டாரிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு வந்த தாய்லாந்து பெண்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கொகேயின் போதைப் பொருளுடன் தாய்லாந்து யுவதி கட்டுநாயக்கவில் கைது


20 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேயின் போதைப்பொருளை கடத்த முயன்ற தாய்லாந்து பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

விபசார விடுதி நடத்த உதவிய தாய்லாந்து பெண்ணுக்கு அபராதம்


கொள்ளுபிட்டி ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் விபசார விடுதியொன்றை நடத்த உதவிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தாய்லாந்து பெண்ணொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன 50,000 ரூபா அபராதம் விதித்தார்.

புதன், 20 ஜூலை, 2011

அழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ஓட்டம்!

ம த்திய அமைச்சர் முக அழகிரியி்ன் வலது கரம் என்று கூறப்படும் எஸ் ஆர் கோபி தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள்

தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.

செவ்வாய், 23 நவம்பர், 2010

தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2,000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2,000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தாய்லாந்தில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து .


தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்படுமா, இல்லையா என்பது பற்றி அந்நாட்டு நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு தக்சினுக்கு பாதமாக இருந்தால் அவரின் ஆதரவாளர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரதமர் அபிசித் விஜஜீவாவுக்கும் கூடுதல் பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேங்காக்கிலும் தக்சின் ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் கூடுதலாக 20,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

சனி, 16 ஜனவரி, 2010

தாய்லாந்து ஐ.டீ.சி சிறைச்சாலையிலுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.. (புகைப்படங்கள்)


தாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள) எதிர்வரும் 18ம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ய+.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வௌ;வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும், இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம், தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம், ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில், இன்றையதினம் (15.01.2010) மாலை 5.00மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண், பெண், சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவ்வாறு உரையாடியுள்ள போதிலும், உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணாவிரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.

thailand-003thailand-001thailand-004thailand-005