தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2,000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள பௌத்த ஆலயமொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 2,000க்கு மேற்பட்ட சிசுக்களின் சடலங்கள் புதிதாக மீட்கப்பட்டுள்ளன.
இதற்கு ஒரு சில தினங்களின் முன் அதே பௌத்த ஆலயத்தின் பிறிதொரு அறையில் 348 சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சடலங்கள் சட்டவிரோதமாக கருக் கலைப்புக்களை மேற்கொள்ளும் மருத்துவ மனைகளிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து பணத்துக்காக சிசுக்களின் சடலங்களை சேகரித்தமையை மேற்படி கைதுசெய்யப்பட்ட 33 வயது பெண் ஒப்புக்கொண்டுள்ளார். சிசுக்களின் சடலங்களை பௌத்த ஆலயத்தில் தகனம் செய்வதற்கு ஒரு சிசுவுக்கு 16 அமெக்க டொலர் பெறுமதியான பணம் கட்டண மாக தனக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
பௌத்த ஆலய சவக்கிடங்கில் தகனத்துக்காக சடலங்களை வைக்கப் பயன்படும் கொள்கலன்களில் இந்த சிசுக்களின் சடலங்கள் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சட்டவிரோத கருக்கலைப்புகளை மேற்கொண்டு வருவன என்ற சந்தேகத்தில் சுமார் 4,000 மருத்துவமனைகளில் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’