வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 நவம்பர், 2010

நளினியின் மனுவுக்கு தமிழக அரசின் அபிப்பிராயம் கோரும் உச்ச நீதிமன்றம்

யுட் தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியுமான நளினி ஸ்ரீகரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுபற்றிய மாநில அரசின் அபிப்பிராயத்தை தமிழ்நாட்டு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
44 வயதான நளினி, பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் உரிய காலத்தின் முன் தன்னை விடுதலை செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது வேண்டுகோளை கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிராகரித்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை கருத்திற் கொண்ட நீதிபதி எம்.சத்தியநாராணன், அம்மாதம் 30ஆம் திகதிக்கு மாநில அரசின் பதிலை அனுப்பும்படி கேட்டுள்ளார்.
19 வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்துள்ள நளினி, மாநில அரசு, தனது காலத்துக்கு முந்திய விடுதலையை நிராகரித்து ஆலோசனை சபையின் சிபாரிசை ஏற்று கட்டளை பிறப்பித்ததாக வாதாடுகிறார். அத்துடன் அந்த கட்டளையை நிராகரிக்குமாறும் கோரியுள்ளார்.
மேலும், ஆலோசனை சபையின் சிபாரிசைவிட கூடிய பொருத்தப்பாடுடைய உயர்நீதிமன்றின் சில, கருத்துக்களை மேற்கொள் காட்டியுள்ளார் நளினி. இவரது விடுதலையை நிராகரித்த நீதிமன்றம், நளினி திட்டமிட்டே இந்த குற்றத்தைச் செய்துள்ளார் என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.
அத்துடன் மிகவும் பாரதூரமான இக்குற்றம் சலுகைகளுக்கு உரியதல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதேவேளை, நளினி கொடூரமான குற்றமிழைத்ததாகவும் பிரதான கொலையாளிக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்ததாகவும் ஆலோசனை சபை கருத்துரைத்தது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரம்பத்தூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டிருந்த போது கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நளினிக்கு 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுடன் அந்த தீர்ப்பினை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
பின்னர் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி நளினியினால் சமர்ப்பிக்கப்பட்ட மன்னிப்பு கோரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவருக்கான மரண தண்டனை, ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’