வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 நவம்பர், 2010

கொரியாவில் மோதல்

ரு கொரியாவுக்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற பரஸ்பர மோதல் சம்பவத்துக்கு இரு நாடுகளும் மற்ற நாடுகளை குற்றம் சாட்டியுள்ளன.

தென் மற்றும் வட கொரியப் படையினர் ஒரு மணிநேரம் தாக்குதல் நடத்தினர். கொரியப் போருக்குப் பிறகு நடைபெற்ற பாரதூர சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவுக்கு சொந்தமான ஒரு தீவுப் பகுதி மீது வட கொரியா பீரங்கி குண்டுத் தாக்குதல் நடத்தியதில் இரு தென் கொரிய சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பொதுமக்களும் படையினரும் அடங்குவார்கள். பல வீடுகள் தீ பற்றி எரிந்தன.
இந்த தாக்குதலை வட கொரியாதான் துவக்கியதாக தென் கொரியா கூறுகிறது. தான் அந்தப் பகுதியில் ஒரு போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஆனால் வட கொரியா மீது சுடவில்லை என்றும் அது கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’