நுவரெலியா ஹைபொரஸட் இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களின் 19 பேர் ஒருவகையான கிருமிநாசினியைச் சுவாசித்த காரணத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாடசாலையின் அருகிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் இன்று முற்பகல் 11 மணியளவில் பயிர்களுக்கு கிருமிநாசினி விசிறியுள்ளார்கள். இந்தக்கிருமி நாசினி காற்றுடன் கலந்து பாடசாலை சூழலைப்பரவியதால் மூன்றாம் தவணைப்பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தரம் 10 மற்றும் தரம் 11 வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சுவாசித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குமட்டலும் வயிற்றுவலியும் ஏற்பட்டதால் உடனடியாக ஹைபொரஸட்; வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
இதன் பின்பு இவர்களில் நான்கு மாணவிகளும் 15 மாணவர்களும் நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் என்று ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை இந்தச்சம்பவம் தொட்ரபாக நுவரெலியா பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் மேலும் தெரிவித்தார். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’