வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2011

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்... உடம்பை பாத்துக்கங்க! - கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மூச்சுத் திணறல்-மருத்துவமனையில் ரஜினி: கருணாநிதி நலம் விசாரித்தார்

மூ ச்சுத் திணறல் மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் கருணாநிதி.

திங்கள், 18 ஏப்ரல், 2011

'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக்கு தயங்குவது ஏன்?' - மதுரை ரஜினி ரசிகர்கள்

போ ஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களுக்கு தனிச் சிறப்பு பெற்ற ஊர் மதுரை. கல்யாணம், காதுகுத்து, ஜல்லிக்கட்டு என எல்லா நிகழ்வுகளுக்கும் அசத்தலாக போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதில் இவர்களுக்கு நிகரில்லை.

செவ்வாய், 22 மார்ச், 2011

ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு!

பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

இயக்குநர் செல்வராகவன் நிச்சயதார்த்தம்.. ரஜினி வாழ்த்து

இயக்குநர் செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

திங்கள், 20 டிசம்பர், 2010

லண்டன் மியூசியத்தில் விரைவில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுஸாட்ஸ் (Madame Tussauds) மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெழுகுச் சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள், 1 நவம்பர், 2010

ரஜினி தந்த தீபாவளிப் பரிசு!

எந்திரனில் 'ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்' என துப்பாக்கி புல்லட்டுகளை தீபாவளிப் பரிசாகத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, நிஜத்தில் சென்னை யின் இரு முக்கிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அனைத்துப் போலீசாருக்கு அட்டகாசமான தீபாவளிப் பரிசுகளை அள்ளித் தந்துள்ளார்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளது-ரஜினிகாந்த்

என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

வியாழன், 21 அக்டோபர், 2010

100 சதவீதம் வருமான கட்டிய பிறகு சம்பளம் வாங்கிய ரஜினி!

"எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்த பிறகு, படம் முடியும் வரையில் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி ... அதை இன்றுவரை காப்பாற்றுகிறார்" என்று படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலாநிதி மாறன் குறிப்பிட்டிருந்தார்.

புதன், 6 அக்டோபர், 2010

பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி: ரஜனிகாந்த்

சிவசேன இயக்கத்தின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி' என சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார். 'எந்திரன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் மும்பாயில் திரையிடப்பட்டபோது அங்கு அதிதியாக கலந்துகொண்ட ரஜனிகாந்த், அந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சுபுர்பன் பந்த்ராவில் அமைந்துள்ள 'மடோஸ்றி' இல்லத்தில் சிவசேன தலைவர் பால் தாக்கரேயை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தபோதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்

புதன், 9 ஜூன், 2010

பாட்ஷா-2: பரபரப்பில் சத்யா மூவீஸ்!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடம் ரஜினி நடித்த பாட்ஷா படத்துக்கு உண்டு. அந்தப் படம் படைத்த வசூல் சாதனைகள் அத்தனை உண்டு. அரசியலிலும் அந்தப் படத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.
இப்போது, அந்தப் படத்தின் இரண்டாம் பகுதியை தயாரிப்பதில் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணமும் ரஜினியேதான்.

சனி, 12 டிசம்பர், 2009

ரஜினிகாந்துக்கு அமிதாப்பச்சன், நடிகைகள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர், நடிகைகள் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரஜினி தெய்வீக வாழ்க்கை வாழ்கிறார். 60 வயது வந்தாலே ஒரு ஒளி பிறக்கும். இந்த வருடம் அவருக்கு விசேஷமானது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு அவர் உதாரணமாக இருக்கிறார். எனது சிறந்த நண்பர் எளிமையானவர் பண்பாளர். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தால் கூட அதையும் தாண்டி எளிமையாக இருக்கிறார். இதுபோன்ற மனிதரை பார்ப்பது அபூர்வம் என்று அமிதாப் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரஜினி அற்புதமான மனிதர். நான் பார்த்தவர்களில் தலை சிறந்த மனிதர் அவர்தான். மூன்று படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தது பெருமையாக இருக்கிறது. சினிமாவில் நிறைய இளம் ஹீரோக்கள் உள்ளனர். அப்படி எத்தனைபேர் இருந்தாலும் ரஜினிதான் இளமையானவர். ரஜினி இருக்கிற தமிழ் சினிமாவில் நானும் இருப்பதில் பெருமை படுகிறேன். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ஆண்டவன் எல்லா ஆசிகளையும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார். நடிகை ஸ்ரேயா கூறுகையில், ரஜினியை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். குறிக்கோளுடன் உழைத்தால் எதையும் அடையலாம் என்று அவர் நிரூபித்து காட்டி இருக்கிறார். ரஜினியை நம்மில் ஒருவராகவே பார்க்கலாம். இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும். இன்று அவரது பிறந்தநாளில் நிறைய பேர் வாழ்த்துவார்கள். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் சந்தோஷப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினி மனைவி லதா கூறுகையில், நான் அவரை குழந்தை மாதிரிதான் பார்க்கிறேன். அவருக்கு குழந்தை மனம். அடிக்கடி தன்னை அவர் சுய பரிசோதனை செய்து கொள்கிறார். வீட்டுக்கு வரும்போது அப்பாவாகவும் குடும்ப தலைவராகவும் தான் வருவார். நடிகராக வரமாட்டார் என்று கூறினார்.