வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 அக்டோபர், 2010

100 சதவீதம் வருமான கட்டிய பிறகு சம்பளம் வாங்கிய ரஜினி!

"எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்த பிறகு, படம் முடியும் வரையில் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி ... அதை இன்றுவரை காப்பாற்றுகிறார்" என்று படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலாநிதி மாறன் குறிப்பிட்டிருந்தார்.
படம் வெளியாகிவிட்டது. பெரும் வெற்றி ... அள்ள அள்ள கோடிகளில் குவிகிறது வசூல். எனில் ரஜினிக்கு சம்பளம் கொடுத்துவிட்டார்களா?
ஆம்.... ரஜினிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதை ரஜினி வாங்கிய விதம், அவர் எத்தனை புத்திசாலி என்பதை நிரூபிக்கிறது. நேற்று முளைத்த காளான் நடிகர் கூட பிளாக்ல எவ்வளவு என்று கீழ்க்குரலில் சம்பளம் பேசும் இன்றைய சூழலில் இவர் முழு சம்பளத்தில் வெள்ளையாகவே தாருங்கள் என்று கூறிப் பெற்றுள்ளார்.
வழக்கமாக குறிப்பிட்ட ஏரியாவை சம்பளத்தோடு ரஜினிக்குத் தருவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் எந்திரனுக்கு அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்ட ரஜினி, முழு சம்பளத்துக்கும் வருமான வரியைச் செலுத்தி டிடிஎஸ் சான்றிதழோடு காசோலை கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.
ரஜினியின் விருப்பப்படியே முழு சம்பளத்துக்கும் வரி செலுத்தி, டிடிஎஸ் சான்றிதழ் மற்றும் காசோலையை ரஜினியிடம் கலாநிதி மாறன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ரஜினி தனது முழு சம்பளத்துக்கும் தொடர்ந்து முறையாக வரி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதாவது நோ ப்ளாக். 15 ஆண்டுகளுக்கும் மேல், வருமான வரித்துறையிடமிருந்து "பக்காவாக வரி செலுத்துபவர்" என்ற நற்சான்றும் பெற்று வருகிறார்.
இதற்கு முன்பு சிவாஜியில் நடித்ததற்கான சம்பளமும், இதே முறையில், வரி செலுத்தப்பட்ட பிறகே அவருக்குத் தரப்பட்டது நினைவிருக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’