சிவசேன இயக்கத்தின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி' என சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார். 'எந்திரன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் மும்பாயில் திரையிடப்பட்டபோது அங்கு அதிதியாக கலந்துகொண்ட ரஜனிகாந்த், அந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சுபுர்பன் பந்த்ராவில் அமைந்துள்ள 'மடோஸ்றி' இல்லத்தில் சிவசேன தலைவர் பால் தாக்கரேயை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தபோதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்
.மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படும் இச்சந்திப்பு பற்றி தெரியவருவதாவது... சூப்பர் ஸ்டார் ரஜனிக்கும் சிவசேன தலைவர் பால் தாக்கரேயிற்கும் இடையிலான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்துள்ளன. இச்சந்திப்பில் 'எந்திரன்' திரைப்படத்தின் தொழில்நுட்ப விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் ஆன்மிகம் சம்பந்தமாக பல விடயங்களை பரிமாறிக்கொண்டதாகவும் 'சிவசேன'வை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சந்திப்பு பற்றி ரஜனிகாந்த் கருத்துத் தெரிவிக்கையில்... '60 வயதிலும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என என்னைப்பார்த்து பால் தாக்கரே கேட்கிறார். அவர் 85 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவது எனக்கு வியப்பாக இருக்கிறது...' என்று தன்னுடைய பாணியில் கருத்துக் கூறியிருக்கிறார்.
இரவருக்குமிடையிலான சந்திப்பில் ஆங்கிலத்திலேயே அதிகமாக உரையாடியதாகவும் இடையிடையே மறாட்டி மொழியும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இருவருக்குமிடையிலான இச்சந்திப்பு அரசியல் பிரமுகர்களின் பார்வையையும் இருவர் மீதும் திருப்பி விட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹிந்தி திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு சிவப்பு கொடி காட்டிய சிவசேன அமைப்பின் தலைவர் பால் தாக்கரே, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தினை கட்டித்தழுவி தனது அன்பினை வெளிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’