வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 அக்டோபர், 2010

நாடாளுமன்ற மைதானத்தைப் பாதுகாக்க வேண்டும் : ஜோசப் கோரிக்கை

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்னாலுள்ள மைதானம் நாடாளுமன்றத்துக்கே சொந்தமானது. வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் மைதானம் சேதமாக்கப்படுகின்றது. எனவே மைதானத்தை வெளியாருக்கு வழங்கக் கூடாது. அதனைப் பாதுகாக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கியத் தேசியக் கட்சி எம். பி. ஜோசப் மைக்கல் பெரேரா இன்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற இன்றைய அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் விசேட கூற்று ஒன்றை விடுத்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

"நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் அமையப் பெற்றுள்ள விளையாட்டு மைதானம் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த மைதானத்தில் சேறு நிறைந்து காணப்படுவதால் அதன் வழியாகச் செல்ல முடியாதிருக்கின்றது.
இந்த மைதானம் நாடாளுமன்றத்துக்குச் சொந்தமானது. மன்ற உறுப்பினர்களான எமக்கும் அது சொந்தமானது. மைதானம் வெளியாரின் தேவைகளுக்காக வழங்கப்படுவதால் தான் அது சேதமடைகிறது. அந்த மைதானம் இசைக் கச்சேரி நடத்துவதற்கும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
இவ்விடயத்தில் சபாநாயகரின் தலையீடு அவசியமானது. நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான மைதானத்தைப் பாதுகாக்க சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்ப்தோடு, வெளியாரின் தேவைக்காக அனுமதிக்கவும் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’