வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள்.
உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.
பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’