வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மூச்சுத் திணறல்-மருத்துவமனையில் ரஜினி: கருணாநிதி நலம் விசாரித்தார்

மூ ச்சுத் திணறல் மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் கருணாநிதி.

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று தனது கனவுப் படமான ராணாவை பூஜையுடன் தொடங்கினார். ஏவி.எம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ரஜினி- தீபிகாபடுகோனேவுடன் டூயட் பாடல் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீரென்று வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டதால் ரஜினி உடனடியாக வெளியேறினார்.
இதையடுத்து மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்குச் சென்றார். அங்கு அவரை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே ஏராளமான மீடியா நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு குவிந்துவிட்டனர். மருத்துவமனைக்குள் விடுமாறு கேட்டனர். உடனே ரஜினி வீட்டுக்குச் சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

நலமுடன் இருக்கிறார்...

இதுகுறித்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் தொடர்பு கொண்டோம். அவர்கள் கூறுகையில், "சார் நலமாக உள்ளார். சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்துவந்தது. படம் தொடங்கிய நேரத்தில் ரஜினிக்கு வயிற்றுக் கோளாறு என்பதால் மருத்துவமனைக்கு மருத்துவமனைக்குப் போனார். அவ்வளவுதான்" என்றனர்.
இதுகுறித்து ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கூறுகையில், "ரஜினி சார் மிக நல்ல முறையில் ராணா படத்தைத் தொடங்கியுள்ளார். வயிற்று வலி காரணமாக செக்கப்புக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அதற்குள் விபரீத அர்த்தம் கற்பித்துவிட்டனர். அவர் நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டுள்ளார்," என்றார்.
ரஜினி மனைவி லதா கூறுகையில், "படப்பிடிப்பு தளத்தில் காலையில் அவர் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் வயிற்று வலி. உடனே மருத்துவமனைக்கு வந்தோம். இப்போது நலமுடன் உள்ளார்", என்றார்.

முதல்வர் கருணாநிதி நலம் விசாரித்தார்:

முன்னதாக தகவல் அறிந்ததும், இசபெல்லா மருத்துவமனைக்கு விரைந்தார் முதல்வர் கருணாநிதி.
ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.'ரஜினிக்கு அஜீரணக் கோளாறுதான். அவர் நலமுடன் உள்ளார்' என்றார், ரஜினியைச் சந்தித்து விட்டு வந்த முதல்வர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’