வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுரேஸ் பிரேமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுரேஸ் பிரேமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 அக்டோபர், 2012

'புலிகளை அழித்துவிட்டதாக கூறும் அரசு எதற்கு பாதுகாப்பு வலயங்களை நிறுவுகிறது?: சுரேஸ்



விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 23 ஜூலை, 2012

பாதுகாப்பு படைகளின் தளபதி பாதுகாப்பு விடயங்களை மட்டுமே பார்க்க வேண்டும்: சுரேஷ்


நாங்கள் மக்களுக்கு 2,000 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கின்றோம். அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? என யாழ். கட்டளை தளபதி கேள்வி எழுப்பியிருந்தார். அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று கேட்கும் அதிகாரம் அவருக்கு இல்லை" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

செவ்வாய், 22 மே, 2012

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி த.தே.கூ. உண்ணாவிரதம்



மிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உடனடித் தீர்வை எட்டும்பொருட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனயிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வவுனியா நகர சபை விளையாட்டு மைதானத்தில் ஏறபாடு செய்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு: சுரேஸ் பிரேமச்சந்திரன்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கையின் ஆளும் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் தம்மோடு சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டாலே அவர்களால் அவர்களது மக்களுக்கு சேவையாற்ற முடியும் என கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை சுதந்திர கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடனோ சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், எனினும் குறிப்பிட்ட கட்சிகளிடமிருந்து, அவ்வாறான உத்தியோகபூர்வ அழைப்புக்கள் எவையும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஈபிடிபியும் சுதந்திர கட்சியுடன் இணையாமல் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தனித்து போட்டியிடவே ஆர்வம் காட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.