வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு: சுரேஸ் பிரேமச்சந்திரன்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கையின் ஆளும் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் தம்மோடு சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டாலே அவர்களால் அவர்களது மக்களுக்கு சேவையாற்ற முடியும் என கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை சுதந்திர கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடனோ சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், எனினும் குறிப்பிட்ட கட்சிகளிடமிருந்து, அவ்வாறான உத்தியோகபூர்வ அழைப்புக்கள் எவையும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஈபிடிபியும் சுதந்திர கட்சியுடன் இணையாமல் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தனித்து போட்டியிடவே ஆர்வம் காட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’