பத்து வருட முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட கடன்முறிகளை விநியோகிப்பதன் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் முடிவடைந்து, வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இக்கடன் முறிகள் விநியோகிக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.இந் நிதி முதலீட்டுச் செலவீனங்களுக்கும் புனரமைப்புக்கும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். "வடமாகாண பொருளாதாரத்தை அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக புதிய வீதி கள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் என்பவற்றை அமைப்பத்றகாக எதிர்வரும் 3 வருடகாலத்தில் எமக்கு 2.7 பில்லியன் டொலர் தேவைப்படும்.இலங்கை தற்போது முதிர்ச்சியடைந்துள்ளதுடன் நீண்டகால முதலீடுகளைச் செய்வதற்கேற்ற முதலீ“டடாளர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது என நாம் கருதுகிறோம்'' எனவும் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இலங்கை 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கடன் முறிகள் மூலம் 500 மில்லியன் டொலர்களை திரட்டியமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’