வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 அக்டோபர், 2012

'புலிகளை அழித்துவிட்டதாக கூறும் அரசு எதற்கு பாதுகாப்பு வலயங்களை நிறுவுகிறது?: சுரேஸ்



விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் பலாலி பகுதியில் 500 மீற்றர் வரையான பகுதியே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு அப்பால் பொதுமக்களே வசித்து வந்தனர். அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு வலையங்களை பெருப்பிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது என்று யாழ். ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநரால் மேற்கண்டவாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே, சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். 'கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பலமாக இருந்தது உண்மைதான் அப்போது ஆட்லறி அடிப்பதற்கும் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இப்போது ஆட்லறிகளும் இல்லை அடிப்பதற்கு ஆட்களும் இல்லாத நிலையில் தேசிய பாதுகாப்பு என்பது எதற்காக? என்று சுரேஸ் எம்.பி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். மக்கள் இல்லாத வலிகாமம் வடக்குப் பகுதியில் தேசிய பாதுகாப்பு வலயம் என்று அடையாளப்படுத்தி அரசாங்கம் பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. அதனால் எமது மக்கள் வீதிகளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலை காரணமாக மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இன்னுமொரு பிரச்சினை உருவாகும்' என்றும் சுரேஸ் எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’