நாங்கள் மக்களுக்கு 2,000 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கின்றோம். அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? என யாழ். கட்டளை தளபதி கேள்வி எழுப்பியிருந்தார். அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று கேட்கும் அதிகாரம் அவருக்கு இல்லை" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளின் தளபதி பாதுகாப்பு விடயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என கேட்டும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கே இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சினால் வீடு கட்டுவதற்கு இராணுவத்திறகு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அவர்கள் கட்டிக்கொடுக்கலாம். எங்களுக்கும் அரசாங்கம் வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கினால் நாங்களும் கட்டிக்கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் தெரிவித்தார். அத்துடன் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள நிமலரூபனின் இறுதி சடங்கிற்காக அவரின் வீட்டை துப்பரவு செய்யும் வேலையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களை அந்த இறுதி சடங்கில் கலந்துகொள்ளவிடாமல் செய்கின்ற ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிவதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரிலும் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்த செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் மற்றும் சரணடைந்தவர்களின் பெற்றோர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாக பல்வேறு இடங்களில் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களின் விவரங்களை தெரிந்துகொண்ட இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனவர்களின் உறவினர்களை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து காணாமல் போனவர்களிற்கான மரணச்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் அங்கு வருகை தந்த 30ற்கு மேற்பட்டவர்களிடம் வெற்றுத்தாளில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழகள் வழங்கும் அதிகாhரம் இராணுவத்தினருக்கு இல்லை. இதனை சிவில் நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும். சிவில் நிர்வாக நடவடிக்களில் இராணுவம் தலையிடுவதால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அந்த வாக்குறுதிகளை மீறப்படுகின்றன. இந்த வகையில் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் வாழுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை பூசா முகாமிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதனால் குறித்த கைதிகளை அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சென்று பார்வையிடும் உரிமை மறுக்கப்படும்' என்றார். இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "கிழக்கு மாகாண சபையில் இரு சிறுபான்மை தேசிய இனங்கள் தங்களின் வாழ்வியல் பூமியில் தங்களது நிலங்களை பாதுகாத்து கொள்வதற்காக கிழக்கு மாகாண சபை தேர்தலில் களம் இறங்கியுள்ளன. முஸ்லிம் மக்கள் தனித்துவமான இனம். அதேபோல் தமிழ் மக்களும் தனித்துவமான இனம். இந்த இரு இனங்களின் தனித்துவ உரிமைகள் பேணப்படுவதற்காக முதலமைச்சர் பதவி பகிரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் மக்களின் தேசியம் காப்பற்றப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை நேசிப்பவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறக்கப்பட்ட மனிதர். ஆவரை கட்டாயம் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையில் அரசு வெல்வதற்காக தனது அரச இயந்திரத்தை முழு வீச்சுடன் நகர்த்திக் கொண்டு இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் வெல்வதன் ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களோடு இருக்கின்றார்கள் என அரசு வெளிநாடுகளுக்கு காட்ட முனைகின்றது. கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதன் மூலம் எமது மண்ணை பாதுகாத்துக் கொள்ள முடியும். மண்ணை பாதுகாப்பதன் மூலம் எமது தேசியத்தை நாங்கள் ஒன்றிணைந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’