உ தயன் பத்திரிகை ஆசிரியர் தொடர்பாக யாழ்.நீதவான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவை ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நீடித்த மேல் முறையீட்டு நீதிமன்றம்,
யாழ். நீதவானை ஓகஸ்ட் 28 இல் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது. இதேசமயம் பிரதிவாதியான யாழ். நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா, ஜுலை 17 ஆம் திகதியிட்டு மேல்முறையீட்டு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் உதயன் ஆசிரியருக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொள்வதற்காக அறிவித்துள்ளார். மேலும், தான் நீதவான் நீதிமன்றத்தின் மேற்படி வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதால் தன்னை இவ்வழக்கின் பிரதிவாதி என்ற வகையில் நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து விடுவிக்கும்படி அவர், கேட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’