வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சினிமா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மார்ச், 2010

சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!

Loogix.com. Animated avatars. Recursion பின் வரும் செய்தியைப் படித்துவிட்டு ஏப்ரல் ஃபூல் சமாச்சாரமோ என்று நினைத்து விட வேண்டாம். நிஜமான சினிமா மேட்டர்தான்!.
சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!

ஞாயிறு, 7 மார்ச், 2010

'புலி வேஷம்' கட்டும் சதா!


ஜெயம் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு இந்தி என வலம் வந்த சதா, இடையில் தமிழ்ப்படங்கள் எதிலும் தலைகாட்டவில்லை.

இடையில் அவர் அளித்த பேட்டிகளில் கூட, தமிழில் நல்ல பாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்தார்.

தற்போது பி வாசு இயக்கத்தில், ஆர்கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப் பிறகு பி வாசு தமிழில் இயக்கும் படம் புலிவேஷம். இடையில் கன்னடத்தில் அவர் இயக்கிய ஆப்தரக்ஷகா சக்கைப்போடு போடுவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய வெற்றி ரேஸுக்குப் பிறகு தயாரித்து கதாநாயகனாக புலிவேஷத்தில் நடிக்கிறார் ஆர்கே.

புலிவேஷத்தில் கிராமத்துக்கும் நகரத்துக்கும் என இரண்டு கதாநாயகிகள்.

இதில் கிராமத்துக்கென கேரளாவிலிருந்து திவ்யா விஸ்வநாத் என்ற புதுமுகத்தை பிடித்துள்ளார் வாசு. நகரத்து நாயகி வேடத்தில் சதா நடிக்கிறாராம்.

இதுபற்றி சதா கூறுகையில், "அந்நியன், உன்னாலே உன்னாலே படங்களுக்குப் பிறகு நான் எடுத்துக் கொண்ட காலகட்டம் அதிகம் என்றாலும், நடித்தால் சிறந்த கேரக்டரில் நடிப்பது... இல்லாவிட்டால் நடிக்காமலேயே இருந்துவிடுவது என்ற முடிவில் இருந்தேன். இந்தப் படங்களுக்குப் பிறகு இடைவெளி சற்று அதிகமாகி விட்டது.

இந்த இடைவெளியில் இரண்டு இந்திப் படங்கள் முடித்து விட்டேன். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் கதாபாத்திரங்கள் சரி இல்லாததால் மறுத்து வந்திருக்கிறேன்.

வாசு சார் இதற்கு முன் இரு படங்களில் நடிக்கக் கேட்டும் சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அந்தக் குறையும் இந்தப் படம் மூலம் நீங்கி விட்டது.

விரைவில் புலிவேஷத்துடன் என்னைப் பார்க்கலாம்...", என்றார் சதா.

முதுகு காட்டினால் தப்பா..? தனுஸ்ரீ ஆவேசம்!


கரீனா கபூர் முதுகைத் திறந்து காட்டி போஸ் கொடுத்தால் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் நான் காட்டினால் மட்டும் பெரிதாக போராட்டம் நடத்துகிறார்கள் என்று எரிச்சல் காட்டுகிறார் அழகான தனுஸ்ரீ தத்தா.

விஷால் நடித்துள்ள தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் மூன்று நாயகியரில் ஒருவராக வந்தவர்தான் தனுஸ்ரீ தத்தா.

இந்தி நாயகியான இவர் தற்போது அங்கு பரபரப்பான நாயகியாக மாறி வருகிறார். அதிலும் அபார்ட்மென்ட் படத்துக்கான விளம்பர போஸ்டர்களில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

முழு முதுகையும் முழுக்கக் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதை எதிர்த்து அங்கு சிலர் போராட்டத்திற்குக் கிளம்பி விட்டனர். இது பண்பாட்டை மீறும் செயல், கலாச்சாரத்தை இழிவுபடுத்தி விட்டார் என்று கொடி பிடித்து வருகின்றனராம்.

இது தனுஸ்ரீக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இதை பெரிதாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. குர்பான் படத்துக்காக கரீனா கபூரும் கூட முதுகு தெரிய காட்சி தந்தார். அதை பெரிய விஷயமாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் முதுகைக் காட்டினால் மட்டும் பொங்கி எழுகிறார்கள்.

முதுகைக் காட்டுவது போல உள்ள போஸ் எதையும் தூண்டுவதாக இல்லை. அழகான உணர்வுகளைத்தான் அது தூண்டும். வேறு எதையும் தூண்டாது.

கரீனா மட்டும் நடிக்கலாம், போஸ் கொடுக்கலாம், நான் கூடாதா என்று பொறுமுகிறார் தனுஸ்ரீ.

சிம்புவை முத்தமிட்டேன். அதில் தவறல்ல!. த்ரிஷா


உதட்டோடு உதடு பதித்து சிம்பு வை பலமுறை விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் முத்தமிட்டேன். படம் அப்படி. எனக்கு அது தப்பாகவும் தெரியவில்லை என்றார் நடிகை த்ரிஷா.

மேலும் இந்த மாதிரி முத்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிம்பு - த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சில இடங்களில் த்ரிஷாவும் சிம்புவும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். உதட்டோடு உதடு பதித்து முத்தங்களும் பறிமாறிக் கொள்கின்றனர்.

இதுபற்றி நடிகை த்ரிஷா நேற்று கூறியது:

முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்தமிட்டேன். அதில் தவறல்ல.

இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும்தான் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் செய்கிறேன். இதில் என் விருப்பமெல்லாம் இல்லை.

இன்றைக்கு திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். சினிமா பற்றி தெரியாதவள் மாதிரி, முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் அது எனக்குத்தான் தகுதி குறைவு.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை பாராட்டி இமெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை. இத்தனை அருமையாக விமர்சனங்களை யாரும் எழுதியதுமில்லை. அவற்றைப் படித்த பிறகுதான், என் மீது எனக்கே மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜெஸ்ஸி போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது. கௌதமுக்கு நன்றி.

ஸ்ரேயாவுடன் பிரச்சினையா?

எனக்கும் ஸ்ரேயாவுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

ரவிதேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் அதற்கு மொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் கேட்டனர். கமல் படம் உள்பட வேறு படங்களில் நடிக்க வேண்டி இருப்பது பற்றி அவர்களிடம் விளக்கினேன். பிறகுதான் அப்படத்தில் இருந்து விலகினேன்.

இப்போது எனக்கு பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருப்பது பற்றி எனக்கு தெரியாது. எப்படியும் எனக்கு பதில் வேறு யாரையாவது அவர்கள் ஒப்பந்தம் செய்துதானே ஆக வேண்டும்.

கமலுக்காக தயாராகிறேன்...

கமல் ஹாஸன் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் நிச்சயம் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் சார் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக் கொள்ளச் சொல்வார். ஏற்கெனவே அவருடைய மர்மயோகிக்காக அந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

ஆடைக்குறைப்புடன் மலையாளத்தில் சோனியா அகர்வால்


செல்வராகவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதற்கு முன்பே தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் சோனியா அகர்வால்.
மொத்தமாக பிரிந்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார்.

திருமணமானவர்களுக்கு கோடம்பாக்கம் அக்கா, அண்ணி, அம்மா வேடம்தானே கொடுக்கும்? எனக்கு இன்னும் இளமை இருக்கிறது, அதனால் கதாநாயகியாகதான் நடிப்பேன் என்று உறுதியாக சோனியா கூறியதால் தமிழில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேநேரம் மலையாளப் படவுலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிறது.

மலையாள திரையுலகம் திருமணத்தை ஒரு பொருட்டாக பார்ப்பதில்லை. திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார் தேவயானி. இன்னும் இதுபோல் நிறைய உதாரணங்கள் கூற முடியும்.

சோனியா நடிக்கவிருப்பது சுரேஷ்கோபிக்கு ஜோடியாக. சுரேஷ்கோபியின் வழக்கமான மசில் படம்தான் இதுவும். டி.எஸ்.சுரேஷ்பாபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

திருமணத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




திங்கள், 22 பிப்ரவரி, 2010

நயன்தாராவின் சிம்பல்


முதல் முறையாக கன்னடப் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. ஹீரோ உபேந்திரா.
சிம்பல் என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார் உபேந்திரா. பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு.

நயன்தாராவின் பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்தது பெங்களூருவில். அவர் கன்னடப் படமொன்றில் நடிப்பதும் இதுவே முதல் முறை. இந்த காரணங்களால் சிம்பல் படத்தை நயன்தாராவும் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.

ராக் லைன் வெங்கடேஷ் படத்தை தயா‌ரிக்கிறார். இவர் சிம்பு நடித்த குத்து படத்தை தயா‌ரித்தவர்.

எனக்கு கல்யாணமா? : மறுக்கும் பாவனா


பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் செய்திகள்.
என்ன சொல்கிறார் பாவனா?

‘என் திருமணத்துக்கு இப்போ அவசரம் இல்லை. சினிமாவில் சாதிக்கணும். திருமணம் பற்றி முடிவானால், மீடியாவிடம்தான் முதலில் சொல்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ‘அசல்’ ரிலீசுக்குப் பிறகு சில கதைகள் கேட்டுள்ளேன்.

கன்னடத்தில் ‘ஜாக்கி’ என்ற படத்தில், புனித் ராஜ்குமார் ஜோடியா நடிக்கிறேன். இது எனது முதல் கன்னடப் படம் என்பதால், கன்னடம் கற்றுக்
கொள்கிறேன்" என்றார் பாவனா.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

தப்பியோடிய பிரபுதேவா?


பிரபுதேவா நயன்தாராவின் கள்ளக்காதல் கண்டு ஊரே ஆனந்தப்படுகிறது. ஆனால் அதை உருப்படியாக கொண்டாட முடியாமல் தவிக்கிறது ஜோடி.
சமீபத்தில் கலைஞர் பாராட்டு விழாவில் அசத்தலாக ஆடி, ஊர் பேசும் பேச்சுக்கு உறுமி மேளம் அடித்தார்கள். ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார்கள். ஆனால், இருவரின் ஆட்டத்தை பார்த்து பெரும் கோபத்திலிருக்கிற ரமலத் மட்டும், "வரட்டும் அவ. பார்த்துக்கிறேன்" என்று பல்லை கடிக்கிறார். இந்நிலையில் பெங்களுருக்கு கன்னட படத்தின் போட்டோ செஷனுக்காக போயிருந்த நயன்தாரா, கூடவே பிரபுதேவாவையும் அழைத்துப் போயிருந்தார். திரும்பி வரும்போது சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிக் கொண்டது இந்த ஜோடி.

வேறொரு வி.ஐ.பி காக காத்திருந்த செய்தியாளர்கள் இவர்கள் கை கோர்த்தடி வருவதை கண்டதும் உஷாரானார்கள். கேமிராவை அந்த பக்கம் திருப்பலாம் என்றிருந்தால்...? ஜோடி எஸ்கேப். அங்கிருந்து தப்பி பன்னாட்டு விமான தளம் வழியாக வெளியேறிவிட்டார்களாம்.
ஏமாந்து போன செய்தியாளர்கள், இப்படி எல்லாருக்கும் பயந்து ஓடுறதுக்கு பதிலாக, ஒரு முடிவுக்கு வந்து அதை முறையா அறிவிச்சு தொலையலாமே என்கிறார்கள்.

திருட்டு தம்முக்குதான் ருசி அதிகம்!

கவர்ச்சியில் கலக்கும் பிரியாமணி


பிரியாமணி தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து ஆந்திரா பட உலகையே அதிர வைத்து வருகிறார்.
அவரது அரைகுறை ஆடைப்படங்களை இணைய தளங்களில் பார்த்து 'பருத்தி வீரன்' முத்தழகியா இவர் என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்.

தமிழில் சமீபத்தில் ரிலீசான 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆறுமுகம்' படங்களில் மூடிக்கொண்டுதான் நடித்தார். அதன் பிறகு 'துரோணா' என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலாக நீச்சல் உடையில் தோன்றினார். நீச்சல் உடை பட போஸ்டர்கள் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தின.

தற்போது 'சாத்யம்' என்ற தெலுங்கு படத்தில் அதை விட ஒரு படி மேலே போய் ஜெகபதி பாபுவுடன் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கம் காட்டி உள்ளார்.

ஜெகபதி பாபுக்கும் பிரியாமணிக்கும் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கள் வருகிறது. இருவரும் பல வருடங்களில் இணைந்து நடித்துள்ளனர். 'சாத்யம்' பட படுக்கை அறை சீன்கள் காதலை நிரூபிப்பதாக உள்ளது என்கின்றனர். இந்த சூடான படங்கள் இணைய தளங்களில் பரவி வருகின்றன.

பிரியாமணியின் கவர்ச்சி படங்களை பார்த்து தமிழ், தெலுங்கு திரையுலக குத்தாட்ட நடிகைகளே ஆடிப்போய் உள்ளனர்.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

சிம்பு-த்ரிஷா ‘லிப் டு லிப்’!


கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு -த்ரிஷா நடித்துள்ள விண்ணத் தாண்டி வருவாயா ரிலீசுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படம் நேற்று சென்னையில் சென்சார் செய்யப்பட்டது. தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படம் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்த தணிக்கைக் குழுவினர், இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கக் காரணம் படத்தி இடம்பெற்றுள்ள சிம்பு- த்ரிஷா முத்தக்காட்சி தான் என்று விளக்கம் அளித்துள்ளனர். காதலர்களின் ரொமான்ஸை வெளிப்படுத்தும் மிக அழுத்தமான உதட்டோடு உதடு பதிக்கும் முத்தக் காட்சிகள் இந்தப்படத்தில் உள்ளதாகவும், ஆனால் அந்தக் காட்சி வெகு சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஜெஸ்ஸி என்ற மலையாளப் பெண்ணாக நடித்துள்ளாராம் த்ரிஷா. ஆஸ்கர், கிராமி அவார்டுகள் பெற்ற பிறகு ரஹ்மான் இசையில் வெளிவரும் முதல் தமிழ்ப் படம் இது. உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தின் வினியோக உரிமையை வாங்கியுள்ளது.

புதன், 10 பிப்ரவரி, 2010

தமிழ்நாட்டுச் செய்தி சிங்கமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்: நடிகர் வடிவேலு


நடிகர் சிங்கமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.25 கோடி நஷ்டயீடு வழக்கு தொடரப்படும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலு சார்பாக வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் நடிகர் சிங்கமுத்துவுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:

எனது கட்சிக்காரர் வடிவேலு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இரண்டு படங்களில் கதாநாயகன் வேடத்திலும் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வார பத்திரிகை மற்றும் தினப்பத்திரிகைக்கு நீங்கள் பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் எனது கட்சிக்காரரரை நரகாசுரன் என்று கூறியுள்ளீர்கள்.

மேலும் எனது கட்சிகாரரிடம் நிர்வாகியாக பணியாற்றிய இரண்டு பேர் இறந்ததற்கும், காயத்ரி என்ற பெண் இறந்ததற்கும் அவர் தான் காரணம் என கூறியுள்ளீர்கள். இதனால் வடிவேலு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்திரிகைகளில் மறுப்பு செய்தி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் மீது அவதூறு வழக்கும், ரூ. 25 கோடி மானநஷ்ட வழக்கும் தொடரப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அசல் அசத்தல் : மூன்றே நாளில் ரூ.18 கோடி வசூல்!


அஜித் நடித்த அசல் படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலை தாண்டியுள்ளது. சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்து கடந்த 6ம்தேதி வெளியான படம் அசல்.
ரசிகர்களின் ஏ‌கோபித்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அசலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் அசல் ரீலிஸ் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி 6ம்தேதி படத்தை திரையிட்டனர்.

உலக‌மெங்கும் 550 தியேட்டர்களில் அசல் படம் திரையிடப்பட்டது. மொத்தம் 41 நாடுகளில் ரீலிஸ் ஆன அசல் படம் தமிழகத்தில் மட்டும் 360 தியேட்டர்களில் ரீலிஸ் செய்யப்பட்டது.

13 வயது சிறுவனுடன் காதல் : கிரண் படத்துக்கு தடை


கிரண் தெலுங்கில் தயாரான 'ஹை ஸ்கூல்' என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். 13 வயது சிறுவனை கிரண் காதலிப்பது போல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் கிரண் ஆசிரியையாகவும் சிறுவன் அவரிடம் படிக்கும் மாணவராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

படப்பிடிப்பு முடிந்து 'ஹை ஸ்கூல்' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கிரணும் சிறுவனும் நெருக்கமாக நடித்துள்ள காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவற்றை நீக்கும்படி கூறினர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து படக்குழுவினர் டிரிபியூனலுக்கு செல்கிறார்கள்.

முழுக் கவர்ச்சிக்கு மாறிய பத்மப்ரியா!


முழுக்க நனைந்த பிறகு பிகினியென்ன, அதற்கும் குறைந்த உடையென்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது பத்மப்ரியா.
சமீபத்தில்தான் அவர் நடித்த முதல் பாலிவுட் படம் ஸ்ட்ரைக்கர் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாலிவுட் தவிர, தென்னிந்தியாவின் நான்கு மொழிப் படங்களிலும் இப்போதைக்கு நடிப்பவர் பத்மப்ரியாதான். தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தெலுங்கில் சர்வானந்துடன் ஒரு படம், கன்னடத்தில் தமாசு என்ற படம்... வழக்கம்போல மலையாளப்படங்கள் அவர் பிஸியாக இருக்கிறாராம்.

பாலிவுட்டிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றனவாம். இந்த வாய்ப்புகளை இழக்காமல் இருக்க அதிரடியாக கவர்ச்சிக்குத் தாவியுள்ளார் பத்மப்ரியா.

கிட்டத்தட்ட டாப்லெஸ் லெவலுக்கு போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து மீடியாவுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தந்து வருகிறார் பத்மப்ரியா.

இதுகுறித்து கேட்டதற்கு, 'நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன். நல்ல ரோல்கள் வேண்டும் என்பதுதான் என் ஒரே நோக்கம். கதைக்காக எந்த அளவும் இறங்கி வந்து நடிக்கலாம். பாலிவுட்டில் நடிப்பதால் கவர்ச்சி காட்டுவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை. எனக்கு சரியென்று படுவதைத்தான் செய்கிறேன். கவர்ச்சி தொடரும்' என்கிறார் பத்மப்ரியா.

சமீபத்தில் சென்னையில் நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படப்பிடிப்பில் மகா கவர்ச்சியுடன் வந்து பார்வையாளர்களைத் திணற வைத்தார் பத்மப்ரியா என்பது நினைவிருக்கும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

ஜீவா ஜோடி


"ஜக்குபாய்', "சிக்குபுக்கு' படங்களின் ரிலீசை எதிர்பார்த்திருக்கும் ஸ்ரேயா, தற்போது "ரவுத்திரம்' என்ற படத்துக்கு ஜீவாவின் ஜோடியாக்கப்பட்டுள்ளார். மற்ற மொழிகளில் வந்த வாய்ப்புகளை விட்டு தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் இன்னும் தமிழை சரியாக பேச கற்றுக் கொள்ளாமல்தான் இருக்கிறார். ""இங்கு ஒரு படத்தை ஆரம்பிப்பதும் தெரியாது. முடிப்பதும் தெரியாது. விரைவாக தமிழில் மட்டும்தான் படம் எடுக்கிறார்கள். ரஜினியுடன் "சிவாஜி' படத்தில் நடித்த பின்தான் நிறைய தமிழ் ரசிகர்களுக்கு என்னைத் தெரிய ஆரம்பித்தது'' என்கிறார்.

புதன், 20 ஜனவரி, 2010

ஈழத்துக்கும் ஆயிரத்தில் ஒருவனுக்கும் சம்மபந்தமில்லை : செல்வராகவன்



ர‌ஜினிகாந்த் படம் பார்த்து பென்டாஸ்டிக் என்று பாராட்டியதுதான் ஆயிரத்தில் ஒருவன் டீமின் சமீபத்திய சந்தோஷம். பேன்டஸியா ஒரு படம் எடுத்தா விமர்சனம்ங்கிற பெயர்ல போஸ்ட்மார்டம் பண்ணுறாங்களே என்பது செல்வராகவனின் ஆதங்கம்.

படத்தின் பிரஸ்மீட்டிலும் இது பிரதிபலித்தது.

ஹாலிவுட்டில் அவதார் படம் எடுத்தா லா‌ஜிக் பார்க்காம பாராட்டுறீங்க. தமிழ்ல அப்படி ஒரு முயற்சி பண்ணுனா ஆயிரம் லா‌ஜிக் மிஸ்டேக் பார்க்கு‌றீங்க. ஒரு தமிழனா நான் எடுக்கிற முயற்சிக்கு நீங்க ஆதரவு தரணும் என்றார் செல்வராகவன். பேச்சில் நிதானம் அளவுக்கு சோகமும் கலந்துகட்டியிருந்தது.

வெளிநாட்டில் படம் பார்த்திட்டு பாராட்டுறாங்க என்ற உப‌ரி தகவலையும் பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டார்கள்.

படத்தில் தான் காட்டியது வரலாற்றில் வாழ்ந்த சோழனில்லை, அது கற்பனை அரசன்தான் என்று மீண்டும் அழுத்தமாக தெ‌ளிவுப்படுத்தினார் செல்வராகவன்.

படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் ஈழப் பிரச்சனையை நினைவுப்படுத்துகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அப்படியெதுவுமில்லை, ஈழப் பிரச்சனைக்கு முன்பே நான் அந்தக் காட்சிகளை எடுத்துவிட்டேன் என்றார்.

இதுவும் வரலாற்று பிழைதான். ஈழப் பிரச்சனை என்ன போன வருடமா தொடங்கியது. முப்பதாண்டு நெடிய போராட்டமல்லவா அது?

சனி, 9 ஜனவரி, 2010

நானும் செல்வாவும்... போட்டு தாக்கும் ரீமாசென்


எதிரும் புதிரும், சண்டக்கோழி இப்படி என்ன டைட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ரீமாசென்-செல்வராகவன் பிரண்ட்ஷிப்புக்கு!

அப்படி ஒரு 'படார் திடீர்' பாசம் இருக்கிறது இருவருக்குள்ளும். ஒரு நாள் பேசாவிட்டாலும் எதையோ இழந்தது போலாகிவிடுவாராம் ரீமாசென்.

"எங்க ரெண்டு பேருக்குள்ளே ஆயிரம் சண்டை வந்தாலும் அவர்தான் என் பிரண்ட். என்னுடைய பாசிட்டிவ், நெகட்டிவ் எல்லாம் தெரிஞ்சவர் அவர்தான்" என்று கூறியிருக்கிறார் ரீமா. (ஹ¨ம், அப்படி போவுதா ரூட்?) இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஆன்ட்ரியா நடித்திருக்கிறார். இருவரில் யாருக்கு முக்கியத்துவம் என்ற கேள்வியை ரீமாவிடம் கேட்டால், "படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனால் நான் இந்த படத்தில் செகண்ட் ஹீரோயின் அல்ல" என்கிறார்.

தமிழ்ல இவருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'கல்யாணம்'. "அப்படி என்ன வயசாயிடுச்சு?" என்று கேட்டலாவது எதையாவது சொல்லி சமாளிக்கலாம். ஆனால், "கல்யாணத்தை பற்றி நான் சிந்தித்ததே இல்லை" என்றால் என்ன செய்வதாம்? காதல், கல்யாணம், இதுக்கெல்லாம் இந்த வருஷத்தில் இடமும் இல்லை. நேரமும் இல்லை என்கிறார் ஒரே போடாக!

இன்னும் ஆட்டம் போட வேண்டியது எவ்வளவோ இருக்கே?

திங்கள், 4 ஜனவரி, 2010

சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்

நவீன தொழில் நுட்பத்தை தனது படங்களில் புகுத்தி தமிழ் சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர் என்றால் மிகையாகாது. கிராபிக்ஸை படங்களில் சரியாக பயன்படுத்துவது முதல் காமிரா ஆங்கிள்கள் வரை இவரது பிரம்மாண்டத்துக்கு இந்தியா சினிமாவில் ஈடு இணையில்லை.

கடின உழைப்பு மற்றும் இடையறாத முயற்சி மூலம் ஷங்கர் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார்.

அவரின் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் பட பிடிப்புகள 90ம% ஷூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்திரன் பட அசத்தலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… இவருக்குள் இருக்கும் இளமையை வெளியே கொண்டுவந்து நமக்கு விருந்து வைத்தமைக்கு ஷங்கருக்கு?


சனி, 2 ஜனவரி, 2010

மறுபடியும் மர்மயோகி கைமாற்றிவிட்ட கமல்!


மருதநாயகம், மர்மயோகி என்று மெகா பட்ஜெட்டில் இறங்கும் போதெல்லாம் ஜகா வாங்க வைக்கிறது விதி. இன்னமும் மருதநாயகத்தை மறக்கவே இல்லை கமல்.
அப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளை மர்மயோகியில் பயன்படுத்துவார் என்று காத்து கிடந்தார்கள் ரசிகர்கள். ஆனால், அந்த மகா கலைஞனின் கனவில் அங்கங்கே பொத்தல்கள்! எல்லாவற்றையும் சரி செய்து அவரது கனவை மீட்டெடுக்க கை கொடுத்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ்.

அப்படியா?

ஆமாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். மர்மயோகியை பொறுத்தவரை கால் கிணறு தாண்டியிருக்கிறார் கமல். லொக்கேஷனிலிருந்து, லோடு பாய் வரை ரெடி. கிளாப் கட்டையை தூக்கிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில் விழுந்த முட்டுக்கட்டையை வலுவான கரம் ஒன்று அகற்ற முன்வந்தால் பயணத்தில் வேகம் பிடிக்கும் என்று காத்திருந்தார். இவர் நினைத்த மாதிரியே எந்திரன் முடிந்ததும் அதே அளவு பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறதாம் சன்.

இடையில் உதயநிதி தயாரிப்பில் ஒரு படமும், துரை.தயாநிதி தயாரிப்பில் ஒரு படமும் நடிக்கப் போகிறார் கமல் என்பது நம்பகமான தகவல்!

தமன்னாவுக்கு வலைவீசும் ரேனிகுண்டா டைரக்டர்

ரேனிகுண்டா என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் தான் அடுத்து தெலுங்கில் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தமன்னாவுக்கு வலைவீசியிருக்கிறார்.
ரேனிகுண்டா வெற்றியைத் தொடர்ந்து 18 வயசு என்ற ‌படத்தை இயக்கி வருகிறார் பன்னீர் செல்வம். ரேனிகுண்டாவில் நாயகனாக நடித்த ஜானிதான் இந்த படத்திலும் ஹீரோ. 18 வயசைத் தொடர்ந்து பன்னீர்செலவம் தெலுங்கில் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான ரோஹித்தான் நாயகனாம். நாயகியாக நடிக்க தமன்னாவிடம் கேட்டிருக்கிறாராம் பன்னீர். ஆனால் அம்மணி இப்போது தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் தெலுங்கு படத்தை ஒப்புக் கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

பாஸிட்டாவான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார் டைரக்டர் பன்னீர்செல்வம்.