
ரஜினிகாந்த் படம் பார்த்து பென்டாஸ்டிக் என்று பாராட்டியதுதான் ஆயிரத்தில் ஒருவன் டீமின் சமீபத்திய சந்தோஷம். பேன்டஸியா ஒரு படம் எடுத்தா விமர்சனம்ங்கிற பெயர்ல போஸ்ட்மார்டம் பண்ணுறாங்களே என்பது செல்வராகவனின் ஆதங்கம்.
படத்தின் பிரஸ்மீட்டிலும் இது பிரதிபலித்தது.
ஹாலிவுட்டில் அவதார் படம் எடுத்தா லாஜிக் பார்க்காம பாராட்டுறீங்க. தமிழ்ல அப்படி ஒரு முயற்சி பண்ணுனா ஆயிரம் லாஜிக் மிஸ்டேக் பார்க்குறீங்க. ஒரு தமிழனா நான் எடுக்கிற முயற்சிக்கு நீங்க ஆதரவு தரணும் என்றார் செல்வராகவன். பேச்சில் நிதானம் அளவுக்கு சோகமும் கலந்துகட்டியிருந்தது.
வெளிநாட்டில் படம் பார்த்திட்டு பாராட்டுறாங்க என்ற உபரி தகவலையும் பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டார்கள்.
படத்தில் தான் காட்டியது வரலாற்றில் வாழ்ந்த சோழனில்லை, அது கற்பனை அரசன்தான் என்று மீண்டும் அழுத்தமாக தெளிவுப்படுத்தினார் செல்வராகவன்.
படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் ஈழப் பிரச்சனையை நினைவுப்படுத்துகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அப்படியெதுவுமில்லை, ஈழப் பிரச்சனைக்கு முன்பே நான் அந்தக் காட்சிகளை எடுத்துவிட்டேன் என்றார்.
இதுவும் வரலாற்று பிழைதான். ஈழப் பிரச்சனை என்ன போன வருடமா தொடங்கியது. முப்பதாண்டு நெடிய போராட்டமல்லவா அது?













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’