வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 பிப்ரவரி, 2010

தமிழ்நாட்டுச் செய்தி சிங்கமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்: நடிகர் வடிவேலு


நடிகர் சிங்கமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.25 கோடி நஷ்டயீடு வழக்கு தொடரப்படும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலு சார்பாக வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் நடிகர் சிங்கமுத்துவுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:

எனது கட்சிக்காரர் வடிவேலு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இரண்டு படங்களில் கதாநாயகன் வேடத்திலும் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வார பத்திரிகை மற்றும் தினப்பத்திரிகைக்கு நீங்கள் பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் எனது கட்சிக்காரரரை நரகாசுரன் என்று கூறியுள்ளீர்கள்.

மேலும் எனது கட்சிகாரரிடம் நிர்வாகியாக பணியாற்றிய இரண்டு பேர் இறந்ததற்கும், காயத்ரி என்ற பெண் இறந்ததற்கும் அவர் தான் காரணம் என கூறியுள்ளீர்கள். இதனால் வடிவேலு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்திரிகைகளில் மறுப்பு செய்தி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் மீது அவதூறு வழக்கும், ரூ. 25 கோடி மானநஷ்ட வழக்கும் தொடரப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’