
அஜித் நடித்த அசல் படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலை தாண்டியுள்ளது. சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்து கடந்த 6ம்தேதி வெளியான படம் அசல்.
ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அசலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் அசல் ரீலிஸ் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி 6ம்தேதி படத்தை திரையிட்டனர்.
உலகமெங்கும் 550 தியேட்டர்களில் அசல் படம் திரையிடப்பட்டது. மொத்தம் 41 நாடுகளில் ரீலிஸ் ஆன அசல் படம் தமிழகத்தில் மட்டும் 360 தியேட்டர்களில் ரீலிஸ் செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’