வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சஜித் பிரேமதாஸ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஜித் பிரேமதாஸ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜனவரி, 2013

கடமையை செய்ய முடியாதவர்கள் பதவி விலக வேண்டும்: சஜித்


க்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முடியாவிட்டால். அவர்கள் பதியிலிருந்து உடனடியாக விலகவேண்டும். என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.,!--more--> மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளாகவே தங்களை நியமித்துள்ளனர். மக்களுக்கு சேவையாற்றுவதை தவிர்த்து சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும் வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துக்கொள்ளவில்லை. நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் -->

திங்கள், 19 டிசம்பர், 2011

ஐ.தே.க.வின் பிரதி தலைவராக சஜித் தெரிவு


க்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர், பிரதித் தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவாகியுள்ளார்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம்

ஐ..தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது

திங்கள், 6 டிசம்பர், 2010

யுத்த குற்றச்செயலில் புலிகளே ஈடுபட்டனர்

லங்கையில் விடுதலைப் புலிகளால் மாத்திரமே யுத்தக் குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

திங்கள், 15 நவம்பர், 2010

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்க அரசு தவறியுள்ளது : சஜித்

ஜித் பிரேமதாஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவை களை வழங்குவதற்கு தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அரிசியினை வழங்கினார்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

சஜித்தை தலைவராக்குவதற்கு ஆதரவு

க்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டுமென அநுராதபுரம், பொலன்னறுவை, காலி மாவட்டங்களின் உள்ளுராட்சி சபைகளைச் சேர்ந்த ஐ.தே.க. அங்கத்தவர்கள் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்

புதன், 21 ஜூலை, 2010

வடக்கு கிழக்கில் 80,000 யுத்த விதவைகள்; அரசாங்கம் திருப்தியாக திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை: சஜித்

வடக்கு கிழக்கில் 80,000 விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டமெதனையும் அரசாங்கம் திருப்திகரமாக மேற்கொள்ளவில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார்.

செவ்வாய், 11 மே, 2010

இனப்படுகொலைக்கு ஒரு போதும் ஆதரவு இல்லை - சஜித் பிரேமதாஸ


இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை வரவேற்றபோதிலும்,இனங்களுக்கு எதிரான படுகொலையை தாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இணையதளத்துக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார்.