சஜித் பிரேமதாஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவை களை வழங்குவதற்கு தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அரிசியினை வழங்கினார்.
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஐ.தே.கட்சி எம்.பி.யான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்ததுடன் நிவாரணங்களையும் வழங்கினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந் புதன்கிழமை இரவு 8.00 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.00 மணிவரையிலான 12.00 மணித்தியாலங்களாக பெய்த கடும் மழையினால் நாட்டின் பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் மேல் மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாணத்தில் இவ்வெள்ளத்தத்தினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவைகளை வழங்கவில்லை.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதனை பார்த்துக்கொண்டு ஒரு ஓரத்தில் இருக்க முடியாது. அம்மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்து எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’