மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காயப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்களைப் பணித்ததோடு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதனை அவதானித்தார்.
அமைச்சர் அவர்களுடன் ஈ.பி.டி.பி யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமாகிய முருகேசு சந்திரகுமார் அவர்களும் உடனிருந்தார்.

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’